For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற சூகிக்கு மோடி வாழ்த்து: இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்த மியான்மரில் 25 ஆண்டுகள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முதல்முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. தேர்தலில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

வெளிநாட்டவரை திருமணம் செய்ததால் சூ கியால் அதிபர் ஆக முடியாவிட்டாலும் உரிய நபரை அவர் அதிபராக நியமிக்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சூ கிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆங் சான் சூ கியிடம் பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவரை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Thursday telephoned Myanmar's democracy icon Aung San Suu Kyi to congratulate her on the electoral victory, an official said. Modi also invited her to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X