For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறைய வைக்கும் பனிக்குகையில் விடிய விடிய பிரதமர் மோடி தியானம்.. பரபரக்கும் கேதார்நாத்!

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi went to Kedarnath: பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றுள்ளார்- வீடியோ

    டேராடூன் :கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். நாளை காலை வரை குகைக்குள்ளேயே அவர் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

    நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 11ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதுவரை 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் நாளை ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தன.

    மீண்டும் பிரதமர் பதவி.... ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்கிறார் மோடி? மீண்டும் பிரதமர் பதவி.... ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்கிறார் மோடி?

    கேதார்நாத்தில் ஆய்வு

    கேதார்நாத்தில் ஆய்வு

    இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோவிலுக்கு புறப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பாரம்பரிய உடை

    பாரம்பரிய உடை

    பின்னர் பாரம்பரிய உடையில் காவி துண்டை இடுப்பில் கட்டியப்படி கையில் தடி, தலையில் தொப்பி என சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். மலைப்பகுதியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்த சக மக்களை பார்த்து கைகளை அசைத்ததோடு கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

    20 மணி நேரம் தியானம்

    20 மணி நேரம் தியானம்

    இதைத்தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் மலையேறிய பிரதமர் மோடி, பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய பனிக்குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார்.தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது.

    நாளை காலை வரை

    உறைய வைக்கும் குளிரில் பனிக்குகையில் காவி துணியை போர்த்தியபடி மோடி தியானம் செய்து வருகிறார். அவர் நாளை காலை வரை பனிக்குகைக்குள்ளேயே தியானம் மேற்கொள்கிறார்.
    முன்னதாக தியானம் மேற்கொள்ளும் மோடியை புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் மோடி தியானம் மேற்கொள்ளும் பகுதியில் புகைப்படக்காரர்கள் மற்றும் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

    ஓய்வெடுக்கும் வகையில்..

    ஓய்வெடுக்கும் வகையில்..

    பிரதமர் மோடி விடிய விடிய தியானம் மேற்கொள்ள இருப்பதால் கேதார்நாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் பிரதமர் மோடி. லோக்சபா தேர்தலுக்காக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரம் செய்த மோடி தற்போறு ஓய்வெடுக்கும் வகையில் கோவில்களுக்கு பயணிக்கிறார். நாளை பத்ரிநாத் கோவிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.

    English summary
    PM Modi did Meditation in Kedarnath cave. Modi have gone to Kedarnath temple to offer prayers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X