For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயோ, ராமா.. என்னை யாருக்கு ஞாபகம் இருக்கும்?.. மோடியை விமர்சிக்கும் தேவ கவுடா.. காரணத்தை பாருங்க!

அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலத்தின் திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா அழைக்கப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போகிபீல் பாலம் திறப்பு விழா.. மோடியை விமர்சிக்கும் தேவ கவுடா-வீடியோ

    ஹவுகாத்தி: அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலத்தின் திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா அழைக்கப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலம் ஆசியாவிலேயே நீளமான இரண்டாவது நீளமான ரயில் பாலம் ஆகும். பிரதமர் மோடி நேற்று இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

    இந்த பாலத்தின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.94 கி.மீ நீளம் செல்கிறது. 5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போகிபீல் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா போகிபீல் பாலத்திற்கு அதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. பின் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் கட்டுமானம் நடந்தது.

    திறக்கப்பட்டது

    திறக்கப்பட்டது

    இந்த நிலையில் நேற்று 21 வருடத்திற்கு பின் நேற்றுதான் இந்த பாலம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா இந்த திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை.

    மிக மோசம்

    மிக மோசம்

    பிரதமர் மோடியின் இந்த செயல் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. என்னதான் இருந்தாலும் மோடி இப்படி நடந்து இருக்க கூடாது, மோடியின் செயல் ஏற்றுக்கொள்ள கூடியது கிடையாது என்று மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    நியாபகம் இல்லை

    நியாபகம் இல்லை

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேவ கவுடா, காஷ்மீருக்கு ரயில், டெல்லி மெட்ரோ, போகி பீல் ரயில் பாலம் ஆகியவை நான் தொடங்கிய திட்டங்கள். நான் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்கள். இதற்காக பலர் உழைத்து இருக்கிறார்கள். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் தற்போது மறந்துவிட்டனர்.

    ஐயோ ராமா

    ஐயோ ராமா

    ஐயோ ராமா என்னை யாருக்கும் ஞாபகம் இல்லை. என்ன செய்வது. எனக்கு இந்த விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை. எதோ சில செய்தி சேனல்கள், பத்திரிகைகள் மட்டும் என் பெயரை கூறியது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.

    English summary
    Aiyo, Rama, PM Modi didn't call me for the inauguration of Bogibeel Bridge says Deve Gowda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X