For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கு போட்டோ எடுக்கவே நேரம் சரியா இருக்கு.. இதுக்கு எங்க நேரம் இருக்கு.. ராகுல் பரபர டிவிட்!

மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.

18 நாட்களுக்கு முன் சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பணி நிறுத்தம்

பணி நிறுத்தம்

அதேபோல் சுரங்கத்திற்குள் உள்ள தண்ணீரை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தற்போது இருக்கும் பம்ப்களை வைத்து நீரை வெளியேற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய திறன் கொண்ட பம்ப் வந்த பின்பே மீட்பு பணி நடக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு மீது குற்றச்சாட்டு

அரசு மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில் மத்திய அரசு இந்த மீட்பு பணியில் சரியாக ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு மீட்பு பணிக்காக போதுமான பொருட்களை அனுப்பவில்லை, மீட்பு படையினரை அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

ராகுல் டிவிட்

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 15 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் இரண்டு வாரத்திற்கு முன் மாட்டிக் கொண்டு காற்று கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி போகிபீல் பாலத்தில் நின்று கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் அரசு ஒரு உயர் அழுத்த பம்ப் தயார் செய்ய கூட தயாராக இல்லை. பிரதமரே கொஞ்சம் ஊழியர்களை காப்பாற்றுங்கள்,என்று கூறியுள்ளார் .

இவரும் கோபம்

மேகாலயாவில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து இவர் ''என்ன ஒரு அவமானம், பம்ப் இல்லை என்று மீட்பு பணிகளை நிறுத்துவதா, இந்தியாவில் பம்ப் கிடைப்பது அத்தனை சிரமமான காரியமாகிவிட்டதா, இல்லை இந்தியாவில் மனித தன்மையே இல்லாமல் போய்விட்டதா'' என்று கேள்வி கேட்டுள்ளார்.

English summary
PM Modi doesn't have time to talk about Meghalaya Mine Rescue says Congress chief Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X