
பிரதமர் மோடி இந்தளவுக்கு பலம் பெற காங்கிரஸே காரணம்.. கோவாவில் மம்தா பானர்ஜி பேட்டி!
பனாஜி: பாஜக ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் இந்த முறை விட்டதை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. பா.ஜ.க. இந்த முறை மிக வலுவாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று துடியாய் துடித்து வருகிறது.
சசிகலாவை தொடர்பு கொள்ளும் எம்எல்ஏக்கள்..? நெருக்கடியில் எடப்பாடியார்! என்ன செய்யும் பாஜக?

கோவாவில் மம்தா
இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிணாமுல் காங்கிரஸ் வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தொடர் நெருக்கடிகளையும் சமாளித்து அசுர வெற்றியை பதிவு செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் , முதல்வருமான மம்தா பானர்ஜி கோவாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் அங்கீகரிக்கத் தவறிவிட்டது
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மம்தா பானர்ஜி கோவாவில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது;- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை காங்கிரஸ் அங்கீகரிக்கத் தவறிவிட்டது. காங்கிரஸால் தான் பிரதமர் மோடி பலமாகி விட்டார். இன்னும் பலமாகப் போகிறார். ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் தான் காங்கிரஸ்.

என்னை எதிர்த்து போட்டியிட்டது
காங்கிரசுக்கு போதுமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இனிமேலும் தேசம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் என்னை எதிர்த்து போட்டியிட்டது. ஆனாலும் காங்கிரஸைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை, ஏனென்றால் அது என்னுடைய கட்சியல்ல.

வலுவாக இருக்க வேண்டும்
கோவாவில் எந்த ஆதரவும் இல்லாத ஒரு பிராந்தியக் கட்சி என்னிடம் உள்ளது.. மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. வேறு எந்தக் கட்சியையும் பற்றி பேசமாட்டேன். அவர்கள் முடிவு செய்யட்டும். பிராந்திய கட்சிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும்... பிராந்திய கட்சிகள் வலுப்பெறுவதை பார்க்க வேண்டும். நாங்கள் மாநிலங்களின் ஒன்றியத்தை விரும்புகிறோம். கூட்டாட்சி அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் வலுவாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாநிலமும் வலுவாக இருந்தால், மையமும் வலுவாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.