For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த ஜனாதிபதி அமிதாப் ? மோடி திட்டமிட்டுள்ளதாக அமர்சிங் தகவல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரை பரிந்துரைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஆச்சரியமளிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பரும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர்சிங். டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நடிகர் அமிதாப்பச்சனை, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இதையடுத்து தான், குஜராத் மாநில சுற்றுலா விளம்பர தூதராக அமிதாப்பை மோடி நியமித்தார்.

PM Modi to nominate Amitabh Bachchan's name for next President of India?

சமீபத்தில் கூட படப்பிடிப்பில் அமிதாப் பிஸியாக இருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வாயிலாக மோடியை சந்தித்தேன். இதில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பை தேர்வு செய்யுங்கள் என வலியுறுத்தினேன். இதனை அவர் மனதில் வைத்துள்ளார்'' என்றார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜுலை 16-ம தேதி நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு ஜுலையில் முடிகிறது. இந்நிலையில், புதிய ஜனாதிபதியாக அமிதாப் பெயரை பிரதமர் மோடி பரிந்துரைக்க திட்மிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர வேண்டும் என நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருஹன் சின்ஹா விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும், கலாசார ரீதியிலும், சமூகத்துக்காகவும் அமிதாப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் குடியரசுத் தலைவரானால் அது பெருமைக்குரிய விஷயமாகும்' என்றும் சத்ருஹன் சின்ஹா கூறியிருந்தார்.

English summary
Politician Amar Singh has revealed something which might surprise a lot and which may make many feel that it could a April Fool's Day joke.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X