For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவோம்- மோடி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    3 தாரக மந்திரங்கள் | மாபெரும் காப்பீடு திட்டம் | விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவோம்- வீடியோ

    டெல்லி: 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    370 ஆண்டுகள் பழமைவாய்ந்த டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    PM Modi promises to send Indian to space by 2022

    கொடியேற்றிய பின்னர் அவர் தனது 5-ஆவது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். 2022க்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும்.

    அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    2014ல் நம்மை பார்த்து சிரித்தவர்கள் ஏராளம். தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தபோது கைகொட்டி சிரித்தார்கள், ஆனால் இன்று அந்த தூய்மை இந்தியா திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது என்றார் மோடி.

    English summary
    PM Modi made a big promise in Independence day, that his government going to send Indian to space by 2022.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X