For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட மோடி-புதின் அலங்காநல்லூர் வருகை என்பது வதந்தியாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    FAKE ALERT: மோடி- புதின் அலங்காநல்லூர் வருகை என்பது வதந்தியாம்!-வீடியோ

    டெல்லி/மதுரை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்வையிட பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகியோர் மதுரை அலங்காநல்லூருக்கு வருகை தர உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என தெரியவந்துள்ளது.

    சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளிடையேயான உறவை இத்தகைய சந்திப்புகள் வலுப்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

    மேலும் இச்சந்திப்பின் போது தமிழரது பாரம்பரிய வேட்டி சட்டையில் மோடி பங்கேற்றார். ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழ் மொழியின் பழம்பெருமையை சுட்டிக்காட்டி பேசினார் மோடி. இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்!காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்!

    மதுரைக்கு மோடி, புதின் வருகை?

    மதுரைக்கு மோடி, புதின் வருகை?

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக பிரதமர் மோடியும் ரஷ்யா அதிபர் புதினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வருகை தருகின்றனர் என்கிற செய்தி வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    புதிய ஹேஷ்டேக்குகள்

    புதிய ஹேஷ்டேக்குகள்

    அடுத்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இரு தலைவர்களும் தமிழகம் வருகை தருகின்றனர் என்ற தகவல் விவாதப் பொருளாகவும் மாறியது. #TamilNadu #Jallikattu #NarendraModi #Putin என்ற ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டன.

    அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

    அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

    பிரதமர் மோடியின் முயற்சியால் தமிழரின் பெருமை உலகுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கருத்துகள் வெளியிடப்பட்டன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    மதுரை மாவட்ட நிர்வாகம் மறுப்பு

    மதுரை மாவட்ட நிர்வாகம் மறுப்பு

    இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகமோ, இது சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்தி. இருநாட்டு தலைவர்கள் வருகை தருவதற்கு முன்னர் முதலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதுவரை மாவட்ட நிர்வாகத்துக்கு இப்படியான ஒரு தகவல் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என தெரிவித்திருந்தது.

    தவறான தகவல்

    இந்நிலையில் மத்திய அரசின் பத்திரிகை துறையின் குஜராத் பிரிவு (PIB Gujarat), பிரதமர் மோடியும் ரஷ்யா அதிபர் புதினும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட மதுரை வருகின்றனர் என்பது தவறான செய்தி. அது வதந்தியானது. இத்தகவலை யாரும் பகிர வேண்டாம் என தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

    டெல்லி அலுவலகங்கள் மறுப்பு

    டெல்லி அலுவலகங்கள் மறுப்பு

    மேலும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களும் மோடி-புதின் ஆகியோரது மதுரை வருகை குறித்த செய்திகளை மறுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவித்துள்ளது. மேலும் இந்த செய்திகள் வதந்தியானவை என்றும் அந்த நாளேடு தெரிவித்திருக்கிறது.

    English summary
    PIB Gujarat said that News on PM Modi and Russian President Putin will attend on Jallikattu in Tamilnadu is wrong.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X