For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது 600 கோடி பேர் ஓட்டு போட்டாங்களா? டாவோஸில் மோடியின் 'டங்க் சிலிப்'

பிரதமர் நரேந்திர மோடி தமக்கு 600 கோடி பேர் வாக்களித்ததாக டாவோஸில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் 600 கோடி பேர் தமக்கு வாக்களித்ததாக டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. 1997-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக இருந்த தேவே கவுடா அப்போது நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றார்.

PM Modi's 600 crore speech video goes viral

20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இம்மாநாட்டில் பங்கேற்றார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பு குறித்தும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் உரையாற்றினார்.

அப்போது, 2014 லோக்சபா தேர்தலில் 600 கோடி வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தனர் என தவறுதலாக பிரதமர் மோடி குறிப்பிட்டுவிட்டார். இது இப்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

English summary
Prime Minister Narendra Modi said "In 2014, after three decades, 600 crore Indian voters for the first time gave complete majority to a political party to form a government" at the World Economic Forum on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X