For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாலியா சம்மர் டூர் போங்க... மன் கி பாத்தில் மோடி அட்வைஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி : சுற்றுலா செல்வதன் மூலம் பல்வேறு புதிய அனுபவங்களும், புத்துணர்வுகளும் வரும் என இன்றைய மன் கி பாத் ரேடியோ உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்காக வானொலி உரை ஆற்றி வருகிறார் பிரதமர் மோடி. ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியின் இந்த உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மட்டும் பேசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மோடியின் இன்றைய உரையில், உலகக் கோப்பை கால்பந்து, விளையாட்டு, சுற்றுலா போன்றவை முக்கிய இடம் பெற்றிருந்தன. அதில் பிரதமர் பேசியதாவது:-

ஈஸ்டர் வாழ்த்துக்கள்...

ஈஸ்டர் வாழ்த்துக்கள்...

உலகம் முழுதும் கிறித்துவர்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர், அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் நண்பர்களே...

இளம் நண்பர்களே...

என்னுடைய இளம் நண்பர்களே, உங்கள் பள்ளித் தேர்வுகளில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருப்பீர்கள், சிலருக்கு இன்று கூடுதல் பரிட்சையும் உள்ளது, அதுதான் இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி. நான் இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃபிபா அண்டர்-17...

ஃபிபா அண்டர்-17...

நாட்டில் ஹாக்கி, கால்பந்து உட்பட பிற விளையாட்டுகள் மீதான ஆர்வம் பெருகி வருகிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் போல் நமது கால்பந்து ரசிகர்கள் கால்பந்தாட்டத்தை ரசித்து மகிழ்கின்றனர். கால்பந்தாட்டத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்து செல்வது அவசியம், இதற்கு ஃபிபா அண்டர்-17 கால்பந்து ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.

கால்பந்து...

கால்பந்து...

கால்பந்து மீது புத்துயிர் பெற்ற மோகம் இப்போது இருந்து வருகிறது. ஆனால் ஃபிபா அண்டர் 17 கால்பந்து தொடரை நாம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து விட முடியுமா? அல்லது நாம் இன்னும் மேலே ஏதாவது செய்ய வேண்டுமா? கால்பந்தாட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள்...

உள்கட்டமைப்பு வசதிகள்...

எனவே இந்த உலகக்கோப்பைப் போட்டி கால்பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பை வலுப்பெறச் செய்து இளைஞர்களை இதன் பக்கம் திருப்பவல்லது. இந்த உலகக்கோப்பையை நடத்துவதன் மூலம் நமக்கு விளையாட்டுத்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இந்த அண்டர் 17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நாட்டின் இளைஞர்கள் அனைவருமே விளம்பரத்தூதராகச் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு...

மாணவர்களுக்கு...

அன்பான மாணவர்களே, தேர்வுகள் முடிந்த பிறகு நீங்கள் விடுமுறை மற்றும் பயணத்திட்டங்கள் குறித்து சிந்திப்பீர்கள். நீங்கள் பயணம் மேற்கொண்டு வெறும் புகைப்படங்களை மட்டும் எடுப்பதோடு முடித்து விடாதீர்கள். அதைப் பற்றி ஏதாவது எழுதுங்கள். வகுப்பறையும், நண்பர்கள் வட்டமும் கற்றுத்தராத விஷயங்களை பயணம் கற்றுக் கொடுக்கும். இந்திய இளைஞர்கள் புதிய இடங்களுக்குச் செல்லும் சாகச மனப்பான்மையுடன் திகழ்கின்றனர்.

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்...

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நண்பர்களே விடுமுறைகள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. எனவே அதனை அப்படியே போக விட்டு விடாமல் ஏதாவது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். விடுமுறை தினங்களில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயத்துடன் மீண்டும் வகுப்பறைக்குச் சென்று நண்பர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு மகிழ்ச்சி தரும் அனுபவம்!!

நீராதாரம்...

நீராதாரம்...

கோடை காலம் அனைவருக்கும் ஓய்வு எடுக்க வேண்டிய காலமாக இருக்கும் வேளையில் நம் விவசாயிகள் வயல்களில் பாடுபட வேண்டியுள்ளது, பிறகு நல் விளைச்சலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விவசாயத்தைக் கருத்தில் கொண்டு நாம் நீரைச் சேமிக்க வேண்டும். நாட்டின் நீராதாரங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன, எனவே பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Sunday shared his thoughts on a number of themes and issues in the 18th edition of 'Mann Ki Baat' programme of All India Radio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X