For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களை தூண்டிவிடுகிறது காங்.: மோடி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ... அஸ்ஸாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு

    தன்பாத்: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பொய்யான தகவல்களை தெரிவித்து போராட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு கனமழை பெய்யும்.. வானிலை மையம் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு கனமழை பெய்யும்.. வானிலை மையம்

    திட்டமிட்டு கிடப்பில் போட்ட காங்.

    திட்டமிட்டு கிடப்பில் போட்ட காங்.

    ராமர் கோவில் பிரச்சனையை திட்டமிட்டே காங்கிரஸ் பல ஆண்டுகாலம் கிடப்பில் போட்டியிருந்தது. நாங்கள் ஒருபோதும் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

    கண்டுகொள்ளாத காங்கிரஸ்

    கண்டுகொள்ளாத காங்கிரஸ்

    நாட்டின் வளர்ச்சிக்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் கடினமான முடிவுகளை எடுக்காது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை 50 ஆண்டுகளாக கிட்டப்பில் போட்டிருந்தது காங்கிரஸ்.

    குடியுரிமை மசோதா

    குடியுரிமை மசோதா

    வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் ஜார்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்கியது. குடியுரிமை மசோதா குறித்து நாட்டு மக்களிடம் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

    தூண்டிவிடும் எதிர்க்கட்சிகள்

    தூண்டிவிடும் எதிர்க்கட்சிகள்

    அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்தான் போராட்டங்களை தூண்டி வருகின்றன. வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் கை வைக்கமாட்டோம்.

    மத்திய அரசு உறுதி

    மத்திய அரசு உறுதி

    வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை உறுதியாக பாதுகாக்கப்படும். அப்பகுதிகளின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    English summary
    Prime Minsiter Narendra Modi has Accused that the Congress and Opposition Parties are Misleading Country on CAB.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X