For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசர நிலை காலத்தில் இந்தியாவே சிறைச்சாலையாக இருந்தது.. அச்ச உணர்வு உருவாக்கப்பட்டது: மோடி

இந்திராவின் அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    43 ஆண்டுகளுக்கு முன்பு பிரகடனப்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி நாட்கள்- வீடியோ

    மும்பை: 1975-ல் அவசர நிலை காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே பெரும் சிறைச்சாலையாக இருந்தது; அவசர நிலை காலத்தில் நடந்தது என்ன என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    1975-ல் இந்திரா பிரதமராக இருந்த போது அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

    PM Modi slams Gandhi family on Emergency

    மும்பையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:

    அவசர நிலை பிரகடன நாளை சம்பிராதயமாக மட்டும் நாங்கள் கறுப்பு தினமாக கடைபிடிக்கவில்லை. காங்கிரஸை விமர்சிப்பதற்கான நாளாக மட்டும் பார்க்கவில்லை.

    இன்றைய இளைஞர்களுக்கு அவசர நிலை காலம் எப்படிப்பட்டது என்பது தெரியவேண்டும் என கருதுகிறோம். அப்போது இந்தியாவே ஒட்டுமொத்த பெரும் சிறைச்சாலையாக இருந்தது. இந்நாட்டில் ஒவ்வொருவரும் அச்சத்துடன் வாழ்ந்தனர்.

    அதிகாரம் தங்களது கையைவிட்டுப் போகிறது என்ற நிலையில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டை அச்சத்தில் உறைய வைத்தனர். அந்த குடும்பத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உடன் தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வருகின்றனர். அவசர நிலை கால மனோநிலையில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை.

    அரசியல் சாசனம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. அவசர நிலையை காங்கிரஸ் கொண்டு வந்தது மன்னிக்க முடியாத ஒரு பாவச் செயல்.

    தற்போது புதிய இந்தியா உதயமாகிக் கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    English summary
    Prime Minister Narendra Modi has said "We remember this date not only to highlight the atrocities during Emergency days but also the sins committed by the Congress".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X