For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாம், ராஜஸ்தான், குஜராத்தை புரட்டிப் போடும் பெருமழை வெள்ளம்! அகமதாபாத்தில் மோடி ஆய்வு!!

குஜராத்தில் மழைவெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆய்வு நடத்தினார்.

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: அஸ்ஸாம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை பெருமழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு நடத்தினார்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மழை கொட்டுவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராஜஸ்தானிலும் பேய்மழை கொட்டி தீர்க்கிறது.

PM Modi takes stock of situation in flood-hit Gujarat

குஜராத்தின் 12 மாவட்டங்களை வெள்ளம் பதம் பார்த்திருக்கிறது. 24 மணிநேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டியுள்ளது. சபர்மதி ஆற்றில் கரைகளை மீறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு பார்வையிட அகமதாபாத்துக்கு இன்று பிற்பகல் பிரதமர் மோடி வருகை தந்தார். அகமதாபாத்தில் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோரிடம் வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார்.

English summary
Prime Minister Narendra Modi on Tuesday took stock of the situation in the flood-affected Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X