For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியா பேசுறாரு?? குஜராத் தேர்தல் குறித்து தீயாக பரவும் ஆடியோ!

குஜராத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொண்டர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ தீயாக பரவி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியா பேசுறாரு?? தீயாக பரவும் ஆடியோ!-வீடியோ

    வதோதரா: குஜராத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொண்டர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ தீயாக பரவி வருகிறது.

    குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் கோபால்பாய் கோகில். ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் இவர், பாஜக வார்டு மட்ட ஊழியராகவும் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலை அவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தபோது எதிர்முனையில் பிரதமர் மோடி பேசியதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    10 நிமிடங்கள் பேசிய மோடி

    10 நிமிடங்கள் பேசிய மோடி

    இதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர். பிரதமர் மோடி கோகிலின் மனைவியிடமும் போனில் பேசியுள்ளார்.இந்த ஆடியோ வாட்ஸ் ஆம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

    2011ஆம் ஆண்டு

    2011ஆம் ஆண்டு

    2011ஆம் ஆண்டு மோடியின் சத்பவானா நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை கோகில் சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

    தேர்தல் குறித்து பேச்சு

    தேர்தல் குறித்து பேச்சு

    கடந்த 2014 லோக் சபா தேர்தலில் வதோதரா தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட்ட போது கோகில் இறங்கி வேலை செய்துள்ளார்.பிரதமர் மோடி கோகிலிடம் மிக எளிமையாகவும் நட்பாகவும் பேசுகிறார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பு குறித்தும் இருவரும் பேசுகின்றனர்.

    ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம்

    ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம்

    இந்நிலையில் மோடியுடன் போனில் பேசிய கோகில் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரங்களை எப்படி சமாளிப்பது என கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் மோடி ஆரம்பி்த்த காலத்தில் இருந்தே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இது போல் நடந்த பொய் பிரச்சாரங்களின் போதும் மக்கள் நம்பிக்கையை பெற்று நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறுகிறார்.

    மக்களுக்கு புரியும்

    மக்களுக்கு புரியும்

    நம் மீது பொய்களும் கேலிகளும் இல்லாத ஏதாவது தேர்தலை உங்களால் சொல்ல முடியுமா? என்னை ரத்த கரை படிந்தவர், கொலைகாரர் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இதையும் மீறி மக்கள் நம்பிக்கையை நாம் வென்றுள்ளோம். மக்களுக்கு உண்மை எது என புரியும் என்றும் மோடி பதிலளிக்கிறார்.

    நேரத்தை வீணாக்காதீர்கள்

    நேரத்தை வீணாக்காதீர்கள்

    அவர்கள் பொய்யை பரப்பட்டும். ஆனால் மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். நீங்கள் இந்த வதந்திகளை கேட்ட கவலைக்கொள்ளாதீர்கள் என்றும் கோகிலுக்கு பிரதமர் மோடி தைரியம் சொல்கிறார். மற்றவர்களின் பொய்க்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதனை உங்கள் மனதிலும் ஏற்றாதீர்கள் என்றும் மோடி கூறுகிறார்.

    எந்த குற்றச்சாட்டும் இல்லை

    எந்த குற்றச்சாட்டும் இல்லை

    பாஜக நீண்ட நாட்களாக ஆட்சியில் உள்ளது. ஆனால் நம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே மக்களுக்கு உண்மை புரியும் என்றும் மோடி கூறுகிறார். நாம் உண்மையை பரப்ப வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

    150 இடங்களில் வெற்றி

    150 இடங்களில் வெற்றி

    தான் அக்டோபர் 22 ஆம் தேதி வதோதராவுக்கு வர இருப்பதாக மோடி கூறுகிறார். அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கோகில் உங்களுக்கு தீபாவளி பரிசாக 150 இடங்களில் வெற்றி பெற்று தருகிறோம் என்று கூறுகிறார்.

    English summary
    A humble businessman from Vadodara and members of his family are on cloud nine since Diwali evening. Gopalbhai Gohil cannot forget the moment when Prime Minister Narendra Modi called him up on phone to greet him on the occasion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X