For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை

By BBC News தமிழ்
|
மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி ஆலோசனை
Getty Images
மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி ஆலோசனை

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்துவார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ், "நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.

குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. மேலும் தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது," என்கிறது அந்நாளிதழ்.

பரவும் கொரோனா?

வட மாநிலங்களில் சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளதாக அந்நாளிதழின் மற்றொரு செய்தி தெரிவிக்கிறது.

மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி ஆலோசனை
Getty Images
மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி ஆலோசனை

மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறும் அந்நாளிதழ் உத்தரபிரதேசம், இமாசல பிரதேசம், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களிலும் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்த மாநிலங்களுக்கு உதவுவதற்காக சிறப்பு குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது என்றும் அங்கு தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த குழுவினர், அங்கு பரிசோதனை அதிகரிப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாட்டு பகுதிகளை வலிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவி புரிவார்கள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

மீண்டும் ஊரடங்கா?

இந்நிலையில், மராட்டியத்தில் 8 முதல் 10 நாட்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர்அஜித் பவார் தெரிவித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ்.

கொரோனாவின் 2ஆம் அலை சுனாமிபோல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ்.

கொரோனாவுக்கு மத்தியில் நிவர் புயல்

கொரோனாவுக்கு மத்தியில் நிவர் புயல்
Getty Images
கொரோனாவுக்கு மத்தியில் நிவர் புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். இந்த புயலுக்கு நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கரை கடப்பதில் இரு விதமான வாய்ப்புகள் உள்ளன என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

நிவர் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது இணையதளத்தில் கூறியுள்ளவற்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

"முதல் வாய்ப்பின்படி வலுவிழந்த புயலாக மாறி டெல்டா பகுதியில் வேதாரண்யம் முதல் காரைக்கால் இடையே வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் புயல் கரை கடக்கக் கூடும். இந்த முறையில் வாய்ப்பு இருந்தால் 25-ம் தேதி அன்று புயல் கரை கடக்கலாம்.

புயல் கரை கடக்கும்போது மணிக்கு சராசரியாக 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 80 வேகத்தில் காற்று இருக்கும். ஆனால், வேதாரண்யம் முதல் காரைக்கால் இடையே நிவார் புயல் நிலப்பகுதியில் கரை கடப்பதற்கு 20 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.

இரண்டாவது வாய்ப்பின்படி, வலுவான புயலாக நிவர் புயல் மாறி காைரக்கால் சென்னை இடையே கரை கடக்கவே 80 சதவீதம் வாய்ப்புள்ளது. வரும் 24 முதல் 25-ம் தேதிவரை கனமழை பெய்யும். இதில் 25-ம் தேதி அன்று புயல் கரை கடக்கும் நாளாகும்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
PM Modi to discuss with State Chief Ministers on Covid 19 situation in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X