For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே மிக நீண்டது.. இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 'அடல் சுரங்கப் பாதை..' அர்ப்பணித்தார் மோடி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 'அடல் சுரங்கப்பாதையை' இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டங் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார்.

அடல் சுரங்கப் பாதை, 10, ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். மொத்த நீளம் 9.02 கி.மீ.

இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரம் 5 மணி நேரம் குறையும்.

போலீஸ் தள்ளிவிட்டும் அஞ்சி பின்வாங்காத ராகுல் காந்தி.. பிரியங்காவுடன் இன்று ஹத்ராஸ் செல்கிறார் போலீஸ் தள்ளிவிட்டும் அஞ்சி பின்வாங்காத ராகுல் காந்தி.. பிரியங்காவுடன் இன்று ஹத்ராஸ் செல்கிறார்

 குளிர்காலத்திலும் பயணிக்கலாம்

குளிர்காலத்திலும் பயணிக்கலாம்

எல்லா வானிலையிலும், ஆண்டு முழுவதும் மணாலியை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும் இப்பாலம். கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு பள்ளத்தாக்கு துண்டிக்கப்பட்டது. ஆனால் இப்பாலம் அந்த குறையை தீர்த்து வைக்கும்.

 10 ஆயிரம் அடி உயரம்

10 ஆயிரம் அடி உயரம்

இமயமலையின் பிர் பஞ்சால் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் (சுமார் 10,000 அடி) உயரத்தில் அதி நவீனமாக, இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுல்ளது. மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக 'அடல் சுரங்கப்பாதை' என்று பெயர் சூட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது.

 பிரதமர் பங்கேற்பு

பிரதமர் பங்கேற்பு

எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது. இங்கு இன்று காலை நடந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சுரங்கப் பாதையை திறந்து வைத்தார். சுரங்க பாதைக்குள் நடந்து, அதை பார்வையிட்டார் மோடி. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இதில் பங்கேற்றார்.

 பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்பு ஏற்பாடு

சீனாவுடனான உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு விரைந்து செல்ல இந்த பாதை உதவும். இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.

English summary
Prime Minister Narendra Modi will inaugurate the strategically important all-weather Atal Tunnel, which reduces the distance between Manali and Leh by 46 km and the travel time by four to five hours, at Rohtang in Himachal Pradesh today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X