For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: உலகின் உயரமான சர்தார் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி

Google Oneindia Tamil News

காந்திநகர்: உலகின் அதி உயரமான சிலையான, இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவரது 143வது பிறந்த நாளான இன்று, குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

Statue of Unity என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிலை உயரம், 182 மீட்டர்கள். அதன் அடித்தளம் 58 மீட்டரையும் சேர்த்தால் மொத்தம் 208 மீட்டர் உயரத்திற்கு மக்கள் தலைநிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கும். 6.5 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் சேதமடையாத வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

PM Modi to unveil Sardar Patels Statue of unity today - Live updates

Newest First Oldest First
10:53 AM, 31 Oct

வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமை கொள்கிறேன்-மோடி பேச்சு

சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்கவில்லை

10:41 AM, 31 Oct

உலகின் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

10:27 AM, 31 Oct

பட்டேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

10:25 AM, 31 Oct

ஒடிசாவின் புரி கடற்கரையில் பட்டேலுக்கு மணலால் சிற்பம் வடித்த சுதர்ஷன் பட்நாயக்
10:23 AM, 31 Oct

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா துவங்கியது

பட்டேல் சிலையை திறக்க வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி

10:13 AM, 31 Oct

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மொத்தம் ரூ.2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் பராமரிப்பு செலவாக ரூ.43.8 கோடி ஒதுக்கப்படும்

மத்திய அரசு, ஒஎன்ஜிசி, பிபிசிஎல், இந்தியன் ஆயில், ஓஐஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிலைக்கான செலவை ஏற்றுள்ளன

சிலையை உருவாக்க 3 வருடங்கள், 9 மாதங்கள் ஆகியுள்ளன

10:12 AM, 31 Oct

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையை வடிவமைத்த பத்ம ஸ்ரீ & பத்ம பூசன் விருதுகள் பெற்ற சிற்பி ராம் வன்ஜி சுதர்தான் பட்டேல் சிலையை வடிவமைத்தார்

எல்அன்டுடி, சீனாவின் ஜியான்க்ஜி மெட்டல் நிறுவனம், துபாயின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை

உருவாக்கிய மலேசியாவின் எவர்சென்டை ஆகியவை சிலை தயாரிப்பில் ஈடுபட்டன

மொத்தம் 3400 தொழிலாளர்கள் சிலை உருவாக்கத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்

English summary
As a tribute to freedom icon Sardar Vallabhbhai Patel on his 143rd birth anniversary, Prime Minister Narendra Modi will today unveil the 'Statue of Unity', which at 182 metres is the tallest in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X