For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆரம்பமே இப்படியா.. 'சாமி சிலையாக்கப்பட்ட' சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை

Google Oneindia Tamil News

Recommended Video

    சாமி சிலையாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை-வீடியோ

    காந்திநகர்: குஜராத்தின் கெவாடியா என்ற இடத்தில் உள்ள நர்மதை நதியோரத்தில், அமைந்த தீவில் 182 மீட்டர் உயரத்திலான சர்தார் வல்லபாய் பட்டேல், சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    Statue of Unity என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிலை உயரம், 182 மீட்டர்கள். அதன் அடித்தளம் 58 மீட்டரையும் சேர்த்தால் மொத்தம் 208 மீட்டர் உயரம் கொண்டது.

    PM Modi unveils worlds tallest statue

    இன்று, பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். அப்போது சிலையின் 58 மீட்டர் அடித்தளம் வரை பிரதமர் மற்றும் அவர் பாதுகாவலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கான படிக்கட்டுகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

    [குமரி முனையில் நிற்கும் கம்பீர திருவள்ளுவரை மறக்க முடியுமா.. இந்தியாவின் உயரமான சிலைகள் இவைதான்! ]

    பிரதமர் அங்கு சென்றபோது, சமஸ்கிருத மொழியில், வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. கோயில் குடமுழுக்கு மாதிரி, மோடி கையில் புனித நீரை கொடுத்து, சிலையில் மீது ஊற்றுமாறு வேத விற்பன்னர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரும் அதை செய்தார்.

    சிலை திறப்பு என்பது கோயில் குட முழுக்கு போன்று நடந்து முடிந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த நாட்டின், உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஆனால் அவருக்கு சமஸ்கிருத முறையில் சிலை நிறுவப்பட்ட சடங்குகள் செய்யப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    PM Modi unveils world's tallest statue, credits Sardar Vallabhbhai Patel for unity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X