For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தை பார்த்தேன்.. பூமியை பார்த்தேன்.. ஆஹா.. படேல் சிலை.. அசத்திய மோடி!

விமானத்தில் பறந்தபடியே படேல் சிலையை பிரதமர் மோடி பார்வையிட்டார்

Google Oneindia Tamil News

காந்திநகர்: இதுவரைக்கும் ஒரு காங்கிரஸ்காரர் கூட படேல் சிலையை பார்க்க வரவே இல்லை என்று புலம்பிய பிரதமர் மோடி, இன்றைக்கு சிலையை பார்வையிட்டார்.. அதுவும் விமானத்தில் பறந்தபடியே!

சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.2,389 கோடி செலவு ஆனது. இவ்வளவு செலவு செய்ய காரணம், இந்த சிலை பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று என்று சொல்லப்படுவதே!

PM Modi viewed Sardar Patel Statue in flight

ஆனால் மறைந்த நேருவை அவமதிப்பதற்காகவோ, சிறுமைப்படுத்துவதற்காகவோ படேல் சிலையை ஒன்றும் நாங்கள் நிறுவவில்லை என்று பாஜக காரணம் சொன்னது. இதோடு விட்டிருந்தால் பரவாயில்லையே.. காஷ்மீர் விவகாரத்தை படேலிடம் நேரு தரவே இல்லை.. தன்னிடமே வைத்து கொண்டார். அதனால்தான் 70 வருஷங்கள் ஆகியும் காஷ்மீர் பிரச்சனை தீராமலேயே இருக்கிறது" என்றார்.

தனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு தனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு

2 நாளைக்கு முன்புகூட குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சிலையை பார்வையிட்டு போகிறார்கள், ஆனால் இதுவரைக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாராவது வந்து சிலையை பார்த்திருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் படேல் சிலையை பார்வையிட்டு இருக்கிறார். விமானத்தில் பறந்தபடியே படேல் சிலையை வீடியோவாக எடுத்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருக்கிறார். விமானத்தில் பறந்தாலும் அருகிலேயே இருப்பது போல இருக்கிறது படேல் சிலை. அவ்வளவு பிரம்மாண்டம்!

English summary
PM Modi viewed Sardar Patel Statue in flight and Tweet about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X