For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயல் தாக்கிய விசாகபட்டிணத்தில் மோடி நாளை ஆய்வு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஹுட்ஹுட் புயலால் சீர்குலைந்துள்ள விசாகபட்டிணம் நகரை நாளை மோடி பார்வையிடுகிறார்.

ஆந்திராவின் விசாகப்பட்டிணம் ஹுட்ஹுட் புயலால் உருகுலைந்து கிடக்கிறது. இந்நிலையில் மீட்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

PM Modi to visit Visakhapatnam tomorrow

பிரதமர் மோடி டுவிட்டரில் இதுகுறித்து இன்று கூறியுள்ளதாவது: ஹுட்ஹுட் புயல் சேதம் குறித்த தகவல்களை உடனுக்குடன் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன். ஆந்திர முதல்வரிடமும் இதுபற்றி பேசினேன். நாளை விசாகபட்டிணம் சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுட்ஹுட் புயல் எதிரொலியாக பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அம்மாநில அரசுகள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
PM Narendra Modi will visit Visakhapatnam tomorrow to assess the situation. The Prime Minister posted a tweet, saying that he had also spoken to Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X