For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்திற்கு மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்து கூறினார்.

PM Modi wishes to Ram Nath Kovind

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், நாட்டின் 14 வது குடியரசு தலைவர் ஆகிறார். மொத்தம் பதிவான 10 லட்சத்து 69,358 வாக்குகளில் 7,02,044 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் 3,67,314 வாக்குகள் பெற்றுள்ளார்.

Recommended Video

    India's new President Ram Nath Kovind-Oneindia Tamil

    மோடி வாழ்த்து

    குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஓபிஎஸ் வாழ்த்து

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் 14வது குடியரசுத்தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்திற்கு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். பாரத திருநாட்டின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள், தனது அளப்பறிய ஆற்றலாலும், மிகச்சிறந்த சேவையாலும், பேரும், புகழும் பெற வேண்டுமென்று எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

    English summary
    PM Modi tweets, Congratulations to Shri Ram Nath Kovind Ji on being elected the President of India! Best wishes for a fruitful inspiring tenure.My best wishes to Kovind ji, it is upon him to uphold the Constitution in letter and spirit in these challenging times, says Meira Kumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X