For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பித்தான் ஆகணும்.. மோடி கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே.. மொத்த சொத்தும் ரூ. 3 கோடிக்குள்தான்!

வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் மோடியின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi files nomination 2019 | சொத்து மதிப்பை வெளியிட்டார் மோடி

    சென்னை: நம்பித்தான் ஆகணும்.. வேற வழியே இல்லை.. மோடி கையில் வெறும் ரூ. 38,750 மட்டும்தான் இருக்காம். சொந்தமாக ஒரு கார்கூட இல்லையாம்.. பைக் கூட இல்லையாம்! ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியின் அசையும் சொத்துக்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நாடு முழுவதும் நடக்க உள்ளது. இப்பதான் 3 கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மிச்சம் இருக்கும் தொகுதிகளில் பிரச்சாரங்கள் களை கட்டி உள்ளன.

    இதில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவையும் இன்று தாக்கல் செய்தார்.

    2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி

    அசையா சொத்து

    அசையா சொத்து

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்பது விதி. அதன்படி மோடியும் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார். அதன்படி பார்த்தால் 2014 தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த அசையும் சொத்துக்களின் மதிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    ரூ. 29,700

    ரூ. 29,700

    வெறும் அவர் கொடுத்துள்ள தகவலின்படி, கையில் இருப்பது ரூ. 38,750 மட்டும்தான். அதேசமயம், 2014 தேர்தலில் இவரது கையில் வெறும் ரூ. 29,700 மட்டுமே இருந்தது.

    அபிடவிட் தாக்கல்

    அபிடவிட் தாக்கல்

    வங்கிக் கணக்கில் வெறும் ரூ. 4,143 ரூபாய் மட்டுமே உள்ளதாம். இது கடந்த 2014ல் 44 லட்சத்து 23 ஆயிரத்து 383 ரூபாயாக இருந்தது. வைப்புத் தொகையாக ரூ. 1,27,81,574 ரூபாய் உள்ளதாம். ரூ. 1.90 லட்சம் அளவுக்கு எல்ஐசி பாலிசி உள்ளது. 2014 அபிடவிட்டில் வைப்புத் தொகை, பாண்ட் உள்ளிட்டவை மொத்தமே 4 லட்சத்து 50 ஆயிரத்து சொச்சம்தான் இருந்தது.

    தங்க மோதிரங்கள்

    தங்க மோதிரங்கள்

    அவரது பெயரில் சொந்தமாக காரோ, பைக்கோ எதுவும் இல்லை. 45 கிராம் அளவுக்கு தங்க மோதிரங்கள் மோடியிடம் உள்ளன. அதன் மதிப்பு ரூ. 1,13,800 லட்சம் ஆகும். பிரதமர் அலுவலகம் இவருக்கு ரூ. 1,40,895 லட்சம் பணம் தர வேண்டியுள்ளதாம்.

    ரூ. 51,57,582

    ரூ. 51,57,582

    மொத்தத்தில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.1.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இதுவே கடந்த 2014ல் இவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 51,57,582 மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில முதல்வர்

    மாநில முதல்வர்

    ஆனால் கோடிக் கணக்கில் குவித்து வைத்துள்ள மற்ற சாதாரண தலைவர்களுடன் ஒப்பிடும்போது இது மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. 15 வருஷம் ஒரு மாநிலத்தின் முதல்வர், 5 வருஷம் நாட்டை ஆண்ட பிரதமரிடம் வெறும் 3 கோடிக்குள்தான் சொத்துக்கள் இருக்கிறது என்பது மிகவும் வியப்பானதே.

    English summary
    PM Modi has mentioned his movable and immovable assets to the tune of Rs. 2-51 crore in his affidavit
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X