For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சிங்கப்பூரின் தந்தை" லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

நிமோனியா காய்ச்சலால் லீ குவான் 91 வயதில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ல் நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

PM Narendra Modi to attend funeral of Singapore's Lee Kuan Yew

முன்னதாக நேற்று பிரதமர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்.

தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது.

லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடனிருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தார்.

English summary
Prime Minister Narendra Modi will attend the funeral of Lee Kuan Yew, the first prime minister of Singapore, who passed away early Monday morning at the age of 91 after a prolonged battle with pneumonia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X