For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆகாயத்தில் பறந்தபடி கையிலே மேப் வைத்து.. புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி-வீடியோ

    புவனேஸ்வர்: ஒடிசாவில் ஃபனி புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    எல்லையை ஒட்டிய ஒவ்வொரு மாநிலமுமே ஏதோ ஒரு ஆண்டில் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் வங்கடலில் மிக ஆழமான நின்று நிதானமாக சுழற்றி அடித்து ஓடிவந்த ஃபனிபுயல் ஒடிசாவின் பூரி நகரில் கரையை கடந்தது.

    PM Narendra Modi conducts aerial survey of Cyclone fani affected areas in Odisha

    மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்த நிலையில், இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளையும், வீடுகளையும் இழந்தனர். மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்கள் உருகுலைந்து காணப்படுகின்றன.

    இந்நிலையில் மத்திய அரசும், ஒடிசா அரசும் விரைந்து செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களை வேறு இடத்திற்கு நகர்த்தியதால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. புயல் பாதித்த அன்றே ஒடிசா மக்களுக்கு தேசம் துணையாக நிற்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்நிலையில் இன்று ஒடிசாவின் புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

    தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு! தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு!

    அப்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ஒடிசா ஆளுநர் கணேஷ் லால் ஆகியார் மோடியுடன் ஹெலிகாப்டரில் சென்றனர். பிரதமர் மோடி கையில் ஒடிசா மேப்பை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒடிசாவில் ஏற்பட்ட அழிவுகள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து வந்தார்.

    English summary
    PM Narendra Modi conducts aerial survey of Cyclone fani affected areas in Odisha. Governor Ganeshi Lal, CM Naveen Patnaik and Union Minister Dharmendra Pradhan also present.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X