For Daily Alerts
Just In
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.
Spoke to Thiru Edappadi K. Palaniswami & congratulated him on taking over as the Chief Minister of Tamil Nadu.
— Narendra Modi (@narendramodi) February 16, 2017