For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் தினமாகும் இன்று. சுபாஷ் சந்திர போஸின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் உள்ள இன்று நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார்.

நேதாஜியின் பூர்வீக இல்லம் மியூசியமாக மாற்றப்பட்டது. அதையும், பிரதமர் பார்வையிட்டார்.

இதேபோல தேசிய நூலகம் மற்றும் விக்டோரியா மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளுக்கும் மோடி சென்றார். இந்த நிகழ்ச்சியின்போது ஆரம்பத்தில் பிரதமர் நரேந்திர மோடி முக கவசம் அணியவில்லை.

கொல்கத்தா விசிட்

கொல்கத்தா விசிட்

அவருடைய ஹாலில் பக்கத்தில் நடந்து சென்ற மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முக கவசம் அணிந்து இருந்தார். உடன் வந்த பாதுகாப்பு வீரர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர். இது பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

இதன்பிறகு, விக்டோரியா மெமோரியல் ஹால் வெளியே வந்தபோது முக கவசம் அணிந்து கொண்டார் நரேந்திர மோடி. ஆனால் சில நிமிடங்களிலேயே மீண்டும் முகக் கவசத்தை நீக்கிவிட்டார். இத்தனைக்கும் அங்கு நல்ல கூட்டம் இருந்தது.

மோடி வலியுறுத்தல்

முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறி வருபவர். அவர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று பல நெட்டிசன்களும் கருத்து தெரிவித்தனர்.

அக்கறை விமர்சனங்கள்

பாஜக ஆதரவாளர்களும், மோடி ஆதரவாளர்களும், அவர் தனது பாதுகாப்பு விஷயத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்று அக்கறையோடு கருத்துக்களை முன் வைத்தனர்.

English summary
Prime Minister Narendra Modi didn't wear a mask while visiting Victoria memorial hall in Kolkata on the occasion of Netaji Subhash Chandra Bose birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X