For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தது நரேந்திர மோடி "ஆப்" ! பொதுமக்கள் செல்போனில் கலந்துரையாடலாம்!!

Google Oneindia Tamil News

டெல்லி : நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இ-மெயில்கள பொதுமக்கள் பெற முடியும்.

டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இதன் மூலம் பொதுமக்களிடையே அவருக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

modi

அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார்.

இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையான தகவல்கள், இமெயில்கள் மற்றும், மான்கிபாத் வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து பிரதமருடன் கலந்துரையாடலாம்.

மேலும் அரசின் சாதனைகள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அந்த செயலியில் வசதிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த அணுகுமுறையை டுவிட்டர் கணக்கில் தொடர்பவர்கள் வெகுவாக பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

English summary
PM Narendra Modi launches his own mobile app and, asks citizens to connect with him.App comes to Google Play Store
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X