For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்சில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு.. கட்டித் தழுவி நெகிழ்ச்சி

ஏசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றார். இந்த மாநாடு வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்க இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ஏசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பைன்ஸ் சென்று இருக்கிறார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் டிரம்பை மோடி சந்தித்தார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 10 நாடுகள் கலந்து கொள்ளும் ஏசியான் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாடு வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்க இருக்கிறது.

PM Narendra Modi meets Donald Trump in Philippines

இந்த மாநாட்டில் ஆசியாவில் இருக்கும் நாடுகளின் பொருளாதார நிலை, எல்லை பிரச்சனை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி இன்று பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அவர் முதல்முறையாக பிலிப்பைன்ஸ் சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் சென்ற சில மணிநேரத்தில் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். இவர்கள் சந்திப்பு சில நிமிடம் மட்டுமே நடந்தது. இந்த நிலையில் டிரம்ப், மோடி நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதால் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டனர்.

டிரம்ப் குர்த்தாஸில் வந்து இருந்தார். மோடியும், டிரம்ப்பும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர். ஆசியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும், பொருளாதர ஏற்றத்தாழ்வு குறித்தும் இவர்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் சீனா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகள் கலந்து கொள்கின்றன. அதேபோல் ஏசியான் மாநாடு மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து கிழக்கு ஆசியா நாடுகளுக்கான மாநாடும் சிறிய அளவில் அங்கு நடக்கிறது.

English summary
PM Narendra Modi went to Philippines for ASEAN Summit. He will attend East Asia summits. He meets Donald Trump in Philippines
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X