For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி– தலைவர்கள் அஞ்சலி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தை உயிர்நீத்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 வீரர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 பாதுகாப்பு படை போலீசார் உள்பட 7 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

PM Narendra Modi Pays Tribute to Martyrs of 2001 Parliament Attack

நடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உயர் பாதுகாப்பு படை வீரர்களின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் உயிர் தியாகம் செய்தவர்களின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக ட்விட்டரில் மோடி கூறும் போது, நமது ஜனநாயகமான நாடாளுமன்ற கோவிலை பாதுகாக்கும் பொருட்டு தங்களது உயிர்களை இழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்களது தியாகம் நமது நினைவில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

English summary
On the anniversary of the 2001 attack on Parliament, Prime Minister Narendra Modi, Lok Sabha Speaker Sumitra Mahajan and other parliamentarians paid tribute to the soldiers who lost their lives during the deadly terror attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X