For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்னும் இமயமலை எங்கள் மலையே... ஸ்டைல் தொப்பி அணிந்து பாரதியின் கவிதை சொன்ன மோடி

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார். முண்டாசு கட்டிய கவிஞர் பாரதியின் வரிகளை ஸ்டைலாக தொப்பி அணிந்து பாடியுள்ளார் பிரதமர் மோடி.

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 145 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

PM Narendra Modi quotes Tamil poet Subramania Bharthi in Gujarath

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார்.

பிரதமர் மோடி பொதுவாகவே பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். அயோத்தி ராமஜென்ம பூமியில் கம்ப ராமாயாணத்தை மேற்கோள் காட்டி பேசினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தின உரையிலும் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்

இன்று குஜராத்தில் பாரதியாரின் கவிதைகளை தமிழிலேயே உச்சரித்தார் பிரதமர் மோடி.

மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே என்று பேசினார் மோடி.

உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார் பாரதியார். இந்த அற்புதமான கவிதையை இன்றைய தினம் மேற்கோள் காட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி.

நம் நாட்டின் வட எல்லையில், ஆசியாவின் பிற நாடுகளில் இருந்து, இந்தியத் துணைக் கண்டத்தைக் காக்கும் இயற்கை பாதுகாப்பு அரணாக விளங்குவது இமயமலை. உலகத்தின் சிறந்த மாபெரும் மலைத் தொடர்களில் ஒன்றான இமயமலை பற்றி பல ஆச்சரியங்கள் உள்ளன.

இமயமலை மொத்தம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், திபெத், நேபாள் மற்றும் பூடான் ஆகிய ஆறு நாடுகளில் பறந்து விரிந்துள்ளது. உலகின் பெயர்பெற்ற ஜீவநதிகளான சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, மீகாங், மஞ்சள் ஆறு எனப்படும் யாங்சே போன்றவற்றின் பிறப்பிடம் இமயமலைதான்.

இமயமலைக்கு தனியாக யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்று சொல்லும் வகையிலும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

English summary
Speaking on the occasion of Sardar Vallabhbhai Patel's birthday in Gujarat, Prime Minister Narendra Modi quoted Bhartiyar's poems as saying, "Mannum Himalayas are our mountains." Prime Minister Modi sings Bharti's lines in a stylish hat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X