For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாய் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி!

Google Oneindia Tamil News

காந்திநகர்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு அவரது தாயார் ஹிராபா மோடி ரூ 25 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.

உலக நாடுகளின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸின் சமூக பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

PM Narendra Modis mother donates Rs 25000 for PM Cares fund

இதனால் பேருந்து, ரயில், விமான உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், முக்கிய கோவில்கள், மால்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இ்நத நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதற்கு தேவையான ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Recommended Video

    கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி!

    அவரது வேண்டுகோளை ஏற்று கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் என பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மோடியின் தாய் ஹிராபா மோடியும் கொரோனா சிகிச்சைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 25 ஆயிரம் நிதி அளித்துள்ளார். இதை அவர் சொந்த சேமிப்பிலிருந்து அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Narendra Modi's mother Hiraba Modi contributes Rs 25 thousand for PM Cares fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X