For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்

Google Oneindia Tamil News

அயோத்தி: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து லக்னோவுக்கு காலை 9.35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்படும் மோடி காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

Recommended Video

    Modi in Hanuman Garhi for Lord Hanuman’s darshan

    காலை 10.40 மணிக்கு லக்னோ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு புறப்பட்டார் மோடி.

    காலை 11.30 மணிக்கு பி.ஜி கல்லூரியை மோடி ஹெலிகாப்டர் வந்துடைந்தது. அதன் பிறகு ஹனுமன்ஹாரி கோயிலுக்கு புறப்படுவார் மோடி.

    29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள் 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள்

    அனுமாருக்கு முதல் வழிபாடு

    அனுமாருக்கு முதல் வழிபாடு

    காலை 11.40 மணி முதல் 11.50 மணி வரை ஹனுமன்ஹாரியில் தரிசனம் மற்றும் வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்கிறார் மோடி. ராமரை வழிபடும் முன்பு அனுமார் அருளை பெற வேண்டும் என்பது ஐதீகம் என்பதால், முதலில் மோடி அங்கே சென்று, கோவில் கட்டும் பணிகளில் தடங்கல்கள் ஏற்படாமல் நிறைவடைய வேண்டுதலை முன்வைக்கிறார்.

    ராம வழிபாடு

    ராம வழிபாடு

    பிறகு, மதியம் 12 மணிக்கு ராமஜென்ம பூமி பகுதியை வந்தடைகிறார் மோடி. மதியம் 12 முதல் 12.10 வரை குழந்தை ராமரை வழிபடுவார்.
    பகல் 12.15 முதல் 12.25 வரை பாரிஜாத செடியை நடும் நிகழ்வில் பங்கேற்பார். இது இந்திர லோகத்து மரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே அயோத்தியில் பாரிஜாத செடியை நட்டு தண்ணீர் ஊற்றுகிறார் மோடி.

    அறக்கட்டளை

    அறக்கட்டளை

    இங்கிருந்து பிரதமர் மோடி பூமி பூஜை நடைபெறும் இடத்திற்குச் செல்வார். அபிஜத் முகூர்த்த வேளையில், மதியம் 12.30 முதல் 12.40 மணிக்குள், ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுவார். மதியம் 12.45 மணி முதல் 2 மணி வரை மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார்.

    3 மணி நேரம்

    3 மணி நேரம்

    மதியம் 2.15 மணிக்கு சாகேத் பி.ஜி கல்லூரிக்கு வந்து, பிற்பகல் 3.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் லக்னோ விமான நிலையத்தை அடைந்து டெல்லிக்கு புறப்படுகிறார் மோடி. சுமார் 3 மணி நேரம், பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் இருப்பார்.

    English summary
    Prime Minister Narendra Modi will be in Ayodhya for the Bhumi Pujan for the constriction of the Ram Mandir. Ayodhya Ram Mandir Temple: Design, construction cost, height, area, completion time He will spend three hours in Ayodhya during which he will also visit the Hanumangarhi Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X