For Daily Alerts
Just In
பிலிப்பைன்ஸில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 10 நாடுகள் கலந்து கொள்ளும் ஏசியான் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை, எல்லை பிரச்சனை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

மூன்று நாட்கள் நடக்கும் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸ் சென்ற சில மணிநேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்தார். இவர்கள் சநதிப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், பொருளாதர ஏற்றத்தாழ்வு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. ஏசியான் மாநாடு மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து கிழக்கு ஆசியா நாடுகளுக்கான மாநாடும் மணிலாவில் நடைபெறுகிறது.