For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழு கவச உடையுடன்.. சைடஸ் பூங்காவில் நுழைந்த பிரதமர்.. அகமதாபாத் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..!

அகமதாபாத்தில் தடுப்பூசி உற்பத்தியை இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

Google Oneindia Tamil News

குஜராத்: அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு நடத்தினார்.. அப்போது, சைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

Recommended Video

    Modi Special Visit | முழு கவச உடையுடன் ஆய்வு செய்த Modi |Oneindia Tamil

    ஹைதராபாத்தில் உள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.. இது கோவிஷீட் தடுப்பூசியை தயாரித்துள்ளது.. தற்போது அது 3-ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது... அதேபோல, அகமதாபாத்தில் சைடஸ் காடினா நிறுவனமும் தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசேதாதனையில் உள்ளது..

    இதில், 3 கட்ட பரிசோதனைகளையும் முடித்த ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், இந்தியாவில் அதை விநியோகிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.. இந்த 3 நிறுவனங்களுக்கும் பிரதமர் இன்று நேரில் சென்று, தடுப்பூசி தொடர்பான பணிகளை ஆய்வு செய்கிறார்.

     சைடஸ் காடினா

    சைடஸ் காடினா

    அதன்படி, முதலாவதாக, அகமதாபாத் அருகே உள்ள சைடஸ் காடினா பயோடெக் பார்க்கிற்கு பிரதமர் மோடி காலையில் சென்றார்.. அங்கு ஆய்வகம் மற்றும் மருந்து தயாரிக்கும் கூடங்களையும் பார்வையிட்டார்.. பிறகு டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி தயாரிப்பு குறித்தும், அந்த தடுப்பூசி ஆய்வின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    அப்போது சைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.. மேலும் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

     மருத்துவ கவச உடை

    மருத்துவ கவச உடை

    இந்த லேப்பிற்கு பிரதமர் செல்லும்போது, பாதுகாப்பான மருத்துவ கவச உடை அணிந்திருந்தார்.. பிரதமர் இங்கு இன்று வருகிறார் என்று தெரிந்த உடனேயே சைடஸ் பயோடெக் பூங்காவிற்கு வெளியே ஏராளமான மக்கள் காலை முதலே கூடத்தொடங்கி விட்டனர்.. அவர்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.. இதை பார்த்ததும் மக்களும் மோடிக்கு கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இந்த சைடஸ் இதையடுத்துதான், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்... இறுதியாக, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்ய உள்ளார். சமீப காலமாகவே வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவமும் அதிகரித்தபடியே வரும் நிலையில், பிரதமரின் இன்றைய ஆய்வு நடவடிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    PM Narendra Modi visits Zydus Biotech Park in Ahmedabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X