For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீர், நிலம், ஆகாயம் மூன்றிலும் எதிரிகளை தகர்க்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு-பிரதமர் மோடி பெருமிதம்!

கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஒரே சமயத்தில் வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினவிழாவும் ஒரே சமயத்தில் வந்துள்ளதாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

PM Started his speech after flag hoisting

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நான் வணங்குகிறேன். கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினவிழாவும் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். இயற்கை பேரிடரால் இன்னல்களை சந்தித்து வருவது வேதனை அளிக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.

கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் நாடே மன வேதனையில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகளாகும்.ஒற்றுமை, கூட்டு முயற்சி ஆகியவற்றால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம்.

புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். மனதில் நம்பிகையை விதைத்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். நாட்டில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று நிலை இல்லை. அனைவரும் சமம்.

பொருள், பலம் என எல்லாம் இருந்தாலும் எண்ணம் இருந்தால் மட்டுமே செயலை செய்ய முடியும். ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர், நிலம், ஆகாயம் என எதிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் ராணுவத்தின் சேவை அளப்பரியது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்

English summary
Prime Minister Narendra Modi hoisted Tricolour Flag in Redfort on the occasion of Independence day and started his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X