For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய்- மோடி கடிதங்களை பகிரங்கப்படுத்தலாமா? குஜராத்திடம் கருத்து கோரிய பிரதமர் அலுவலகம்!!

By Mathi
Google Oneindia Tamil News

PMO to seek Modi's views on disclosing Gujarat govt's letters with Vajpayee after 2002 riots
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையேயான கடிதங்களை வெளியிடலாமா என்பது குறித்து குஜராத் அரசு மற்றும் மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.

2002 குஜராத் கலவரம் தொடர்பாக வாஜ்பாய், மோடி இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களின் நகல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக் கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி எஸ்.வி.ரிஸ்வி நிராகரித்தார்.

கடிதங்களின் நகல்களை வெளியிடுவதால் குஜராத் கலவர விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பிரதமர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விண்ணப்பதாரருக்கு பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி ரிஸ்வி அளித்துள்ள பதிலில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கடித நகல்களை வெளியிடுவது தொடர்பாக குஜராத் அரசு மற்றும் அந்த மாநில முதல்வரின் கருத்து கோரப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
The Prime Minister's Office will take the nod of Gujarat government and chief minister Narendra Modi for releasing the correspondence exchanged with the then Prime Minister Atal Bihari Vajpayee after the post-Godhra riots in 2002.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X