For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்ல விசயங்களை தாமதம் செய்யக்கூடாது... அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை குறிப்பிட்ட மோடி

தமிழில் கம்ப ராமாயணம் போன்று பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவில் கூட ராமாயணம் சிறப்பன ஒன்றாக உள்ளது. ராமர் கோயில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை குறிக்கும்.

Google Oneindia Tamil News

அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பேசிய மோடி தமிழில் கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசினார். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் கம்ப ராமாயணம் போல உலகின் பல மொழிகளில் ராமாயணம் உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல ராமரை பல்வேறு நாடுகளிலும் வழிபடுகின்றனர். தாய்லாந்து, மலேஷியா, லாவோஸ் நாடுகளிலும் ராமரை வழிபடுகின்றனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவிலும் ராமாயணம் உள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Modi in Hanuman Garhi for Lord Hanuman’s darshan

    அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ ராமர், சீதா தேவியை நினைவு கூறுவோம் என்று ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், ராமர் பாலத்திற்கு கற்கள் வந்தது போல், ராமர் கோவில் கட்டவும் மணல், செங்கல், புனித நீர் வந்துள்ளது. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. பலவருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தருணம் நடந்து முடிந்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் யாராலும் இன்னமும் நம்ப முடியவில்லை.

    ராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி! ராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி!

    ராமரின் வரலாறு

    ராமரின் வரலாறு

    ராமர் கோவில் கட்டுவதற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. சிறிய கூடாரத்தில் இருந்த பகவான் ராமருக்கு பெரிய கோவில் அமைய உள்ளது. ராமர் கோவில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.

    விடுதலை கிடைத்தது

    விடுதலை கிடைத்தது

    கன்னியாகுமரி முதல் நாடு முழுவதும் ராமர் பெயர் ஒலிக்கிறது. ராமர் கோவில் அமைவதற்காக பல தலைமுறைகள் தியாகங்களை செய்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. குமரி முதல் நாடு முழுவது ராமர் நாமம் ஒலிக்கிறது. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

    ராமர் பொதுவானவர்

    ராமர் பொதுவானவர்

    ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். நேபாளத்துக்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது. இலங்கைக்கும் ராமாயணத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராம ராஜ்ஜியமே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

    வளர்ச்சி அதிகரிக்கும்

    வளர்ச்சி அதிகரிக்கும்

    மனிதகுலம் ராமரை நம்பும்போதெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பாதையிலிருந்து விலகிச் செல்லும் போதெல்லாம், அழிவுக்கான கதவுகள் திறந்தன. அனைவரின் உணர்வுகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அனைவரின் ஆதரவுடனும் நம்பிக்கையுடனும் அனைவரின் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும்

    கம்பரின் ராமாயணம்

    கம்பரின் ராமாயணம்

    தமிழில் கம்ப ராமாயணம் போன்று பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலேசியா, இலங்கை, நேபாளத்திலும் கூட ராம கதையை படிக்கின்றனர். முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவில் கூட ராமாயணம் சிறப்பான ஒன்றாக உள்ளது. கம்ப ராமாயணத்தில் ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டி பேசிய மோடி, நாம் செய்ய வேண்டிய விசயங்களை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்று ராமர் கூறியுள்ளதாக கம்பராமாயணத்தில் கம்பர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

    ஒற்றுமைக்கு பாலம்

    ஒற்றுமைக்கு பாலம்

    ராமர் கோயில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை குறிக்கும். இது முழு மனிதகுலத்திற்கும் உத்வேகமாக இருக்கும் என்றார். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அயோத்தி ராமர் கோயில் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வர உள்ளதால் சிறப்புமிக்க இடமாக அயோத்தி மாறும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக ராமர் கோயில் திகழும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi today laid foundation stone of Ram temple in the city of Ayodhya, the birthplace of the Lord. Quiting a verse from Kamba Ramayanam, Modi said, “Poet Kambar had said that Rama had always insisted never delay things that one should do”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X