For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைக்கு பால் கொடுப்பது போல திருட்டு.. 2.5 லட்சம் வரை கொள்ளை.. டெல்லி மெட்ரோவில் திக்! திக்!

டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி மெட்ரோவில் திக்! திக்!...வீடியோ

    டெல்லி: டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 25 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

    இது எல்லாமே டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருடப்பட்ட பணம் ஆகும். கிலோ கணக்கில் நகையும் திருடி இருக்கிறார்கள்.

    தற்போது இந்த குழுவில் 5 பேர் வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    எப்படி உருவானார்கள்

    எப்படி உருவானார்கள்

    இவர்கள் குழு டெல்லியில் உள்ள கத்புட்லி காலனி என்ற இடத்தில் வசித்து வந்துள்ளது. முதலில் லட்சுமி என்ற பெண் மட்டும்தான் திருடி இருக்கிறார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த குழு 20 பேர் கொண்ட பிக் பாக்கெட் இயக்கமாக மாறியுள்ளது. தற்போது அவர்கள் தனியாக கூடாரம் கட்டி வசித்து வருகிறார்கள்.

    பல குழு

    பல குழு

    பொதுவாக இவர்கள் 3ல் இருந்து 10 குழுக்களாக பிரிந்து திருடுவார்கள். இந்த குழுக்களுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும் ஒருவரிடம் திருடும் பொருட்கள் அடுத்த குழுவிற்கு போய் அங்கிருந்து தலைமைக்கு போய் பின் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் அதிகமாக மூன்று நபர்கள் இருக்கிறார்கள்.

    எப்படி செய்கிறார்கள்

    எப்படி செய்கிறார்கள்

    இந்த பெண்கள் மெட்ரோ ரயிலில் கூட்டம் இருக்கும் நேரத்தில் பெண் கம்பார்ட்மெண்டில் மட்டும் ஏறுகிறார்கள். பொதுவாக குழந்தை சுமந்து வந்து பால் கொடுப்பது போல உட்கார்ந்து கொள்கிறார்கள். அப்போது புடவையை வைத்து மறைத்து கொள்ளையடிக்கிறார்கள். சமயங்களில் மயங்கி விழுந்து நடித்து கூட கொள்ளையடிக்கிறார்கள்.

    கொடுக்கிறார்கள்

    கொடுக்கிறார்கள்

    இவர்கள் கொள்ளையடித்தவுடன் உடனே அதை வேறு ஒரு குழுவுக்கு கொடுத்துவிடுகிறார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொரு நிறுத்தத்தில் வெவ்வேறு சமயத்தில் இறங்கும். பின் எதோ இடத்தில் மொத்தமாக சந்தித்து அடுத்த திட்டத்திற்கு ஆயத்தம் ஆவார்கள்.

    கைது

    கைது

    இந்த குழுவில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ் இன்னும் இந்த குழுவின் தலைவி லட்சுமியை கைது செய்யவில்லை. அதேபோல இன்னும் பல லட்சம் பணம் இவர்களிடம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Police arrest 5 women robbers who ruled Delhi metro for years. They seized 25 lakhs from these people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X