For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்வில் காப்பியடிக்க உடந்தை.. ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைப்பு

சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்ததாக கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைப்பு- வீடியோ

    ஹைதராபாத்: சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்ததாக கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இன்று காலை அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட்டார்.

    சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முதல் நாள் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற ஷபீர் கரீம் புளூடூத் கருவியை பயன்படுத்தி காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் அவரது ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     காப்பியடித்த அதிகாரி

    காப்பியடித்த அதிகாரி

    இந்திய ஆட்சிப்பணிகளுக்கான தேர்வு நேற்று முதல்நாள் சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு மாநில பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு தேர்வு எழுத வந்து இருந்தனர். இந்த நிலையில் ஐ பி எஸ் அதிகாரியாக இருக்கும் ஷபீர் கரீம் என்பவரும் ஐஏஎஸ் ஆக விருப்பப்பட்டு அங்கு தேர்வு எழுத வந்து இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதும் போது புளு டூத் கருவியை பயன்படுத்தி காப்பி அடித்து இருக்கிறார்.

     போலீஸ் கண்டுபிடிப்பு

    போலீஸ் கண்டுபிடிப்பு

    அவரை புழு டூத் கருவி மூலம் பதில்களை தெரிந்து கொண்டு காப்பியடித்தது இதில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் இதை கண்டுபிடித்ததை அடுத்து போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரிடம் நடத்திய விசாரணையில், ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் ஆகியோர் இந்த சம்பவத்தில் அவருக்கு உதவியது தெரியவந்தது.

     மனைவி மீதும் வழக்கு

    மனைவி மீதும் வழக்கு

    இதையடுத்து ஹைதராபாத் சென்ற தனிப்படை போலீசார் ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏமாற்றுதல், காப்பியடித்தல், தொழில்நுட்ப பொருட்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

     மனைவி புழல் சிறையில் அடைப்பு

    மனைவி புழல் சிறையில் அடைப்பு

    இதையடுத்து நீதிமன்றத்தில் நடத்த விசாரணையின் முடிவில் இவரது மனைவியை புழல் சிறையில் அடைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ''இதற்கான இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை அதுவரை புழல் சிறையில் அவரது மனைவி இருக்க வேண்டும்'' என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தனர். ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் அவரது ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் இன்று காலை அடைக்கப்பட்டார் . இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    An IPS officer has caught by special team police while cheating in IAS exam. Police also arrested his wife and teacher who helped him for cheating in UPSC exam from Hyderabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X