For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் களைகட்டும் இறைச்சிக்காக தெரு நாய்கடத்தல்- போலீஸ் அதிரடி

Google Oneindia Tamil News

அகர்தலா: நாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் இறைச்சிக்காக நாய் கடத்தல் சம்பங்கள் போலீசாருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

நாகாலாந்தில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியைவிட மிகவும் காஸ்ட்லியானது நாய் இறைச்சிதான். ஊர்வன, பறப்பன என அனைத்தும் நாகா தலைநகர் கோஹிமாவில் கிடைக்கும்.

Police arrested two persons from Tripura-Mizoram border with 12 stray dog

நாகாலாந்தின் பெரும்பாலான உணவகங்களில் நாய் இறைச்சி வகை உணவுகள் பெரிய அந்தஸ்துக்குரியவை. இதனாலேயே அண்டை மாநிலங்களில் இருந்து தெருநாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்திருந்தன.

குறிப்பாக அஸ்ஸாமில் இருந்து சட்டவிரோதமாக நாகாலாந்துக்கு நாய்களை கடத்தும் சம்பவம் அதிகரித்திருந்தன. இந்நிலையில் திரிபுரா- மிசோரம் எல்லையில் போலீசார் நடத்திய சோதனைகளில் 12 தெருநாய்களுடன் சென்ற கார் ஒன்று பிடிபட்டது.

இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த காரை ஓட்டிய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மிசோரமில் நாய் சந்தையில் விற்பதற்காக இவை கடத்தப்படுகின்றன. ஒரு தெருநாயின் விலை ரூ2,000 முதல் ரூ2500 வரை விற்கப்படுகிறது என்கிறார்.

நாட்டில் எந்த எந்த பொருட்களையோ நூதன வழிகளில் கடத்துகிறார்கள்...இவர்கள் குறி தெருநாய்க்கு!

English summary
Police arrested two persons from Tripura-Mizoram border with 12 stray dogs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X