For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சின், லதா மங்கேஷ்கரை கேலிசெய்யும் வீடியோவை நீக்குங்கள்: யூடியூப், பேஸ்புக்கிற்கு போலீஸ் கோரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கரை கேலி செய்து சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதை யூடியூப் மற்றும் பேஸ்புக் தளங்கள் நீக்க வேண்டும் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரை விமர்சித்து, நகைச்சுவை நடிகர் தன்மயி பட்டின் பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று பதிவானது. அதில், தன்மயி பட் தன்னுடைய முக பாவனையை மாற்றி சச்சின் தெண்டுல்கரும், லதா மங்கேஷ்கரும் ஒருவருக்கொருவர் கேலி செய்து மோதி கொள்வதை போல் சித்தரித்து இருந்தார்.

Police ask Facebook and YouTube to remove posts mocking Sachin Tendulkar

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு அரசியல் கட்சியினர், ஹிந்தி திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், சச்சின் தெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கரை விமர்சித்து சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் நகைச்சுவை நடிகர் தன்மயி பட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

விஷயம் சீரியசான நிலையில், யூடியூப் மற்றும் பேஸ்புக் நிறுவன தலைமைக்கு காவல்துறை கடிதம் எழுதி, அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

English summary
Police in India have asked Facebook and YouTube to remove a video posted by a comedian that mocks a legendary Indian singer and a cricket player.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X