For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவிட்டார்.. சொமாட்டோவை சீண்டிய இளைஞருக்கு குட்டு வைத்த போலீஸ்!

சொமாட்டோ நிறுவனம் சார்பாக இந்து மதத்தை சேராத டெலிவரி பாய் ஒருவர் உணவு டெலிவரி செய்ய வந்ததை எதிர்த்த இளைஞருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

போபால்: சொமாட்டோ நிறுவனம் சார்பாக இந்து மதத்தை சேராத டெலிவரி பாய் ஒருவர் உணவு டெலிவரி செய்ய வந்ததை எதிர்த்த இளைஞருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் அமித் சுக்லா என்ற நபர் கடந்த சில நாட்களாக இணையம் முழுக்க வைரலாகி வருகிறார். இவர் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துவிட்டு உணவு வாங்குவதற்காக காத்து இருக்கிறார்.

ஆனால் இவருக்கு உணவு டெலிவரி செய்ய இந்து மதத்தை சேராத டெலிவரி பாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை பார்த்து கொந்தளித்த அந்த மதவாத மனம் கொண்ட அமித் சுக்லா உடனே ஆர்டரை கேன்சல் செய்துள்ளார்.

முத்தலாக் சட்டம் அமலுக்கு வந்தது.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. அரசிதழிலும் வெளியீடு! முத்தலாக் சட்டம் அமலுக்கு வந்தது.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. அரசிதழிலும் வெளியீடு!

என்ன இந்து

அதேபோல் இனிமேல் இந்து மதத்தை சேராத டெலிவரி பாய்களை அனுப்ப கூடாது என்றும் சொமாட்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை பெருமையாக வேறு அவர் டிவிட்டரில் போஸ்ட் செய்தார். இந்த போஸ்ட் பெரிய சர்ச்சையானது.

சொமாட்டோ பதில்

சொமாட்டோ பதில்

இதற்கு பதில் அளித்த சொமாட்டோ, உணவில் மதம் எல்லாம் கிடையாது உணவே மதம்தான் என்று டிவிட் செய்து பதிலடி கொடுத்தது. அதோடு, நாங்கள் மக்களை ஒன்றாக பார்க்கிறோம். இந்தியாவின் ஒற்றுமையை நாங்கள் மதிக்கிறோம். அனைத்து மதங்களையும் மதிக்கிறோம், என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டது.

உபர் உதவி

உபர் உதவி

இந்த நிலையில் சொமாட்டோவிற்கு உபர் ஈட்ஸ் போன்ற சக போட்டி நிறுவனங்களும் ஆதரவு அளித்தது. இந்த நிலையில் தற்போது அமித் சுக்லாவிற்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி அவர் மத கலவரத்தை தூண்டும் வகையில் , இந்திய இறையாண்மைக்கும், அமைதிக்கும் எதிராக பேசியதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இனி பேச மாட்டேன்

இனி பேச மாட்டேன்

இனி இதுபோல பேச மாட்டேன் என்று அவரிடம் உறுதி கடிதம் வாங்கவும் மத்திய பிரதேச போலீஸ் முடிவெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த இளைஞர் தனது டிவிட்டை தற்போது நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Police issued a notice to the man who canceled Zomato food order over religious reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X