For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுமை.. நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளிடம் சில்மிஷம்.. விசாரிக்க போன போலீசே அராஜகம்.. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: சாமியார் நித்யானந்தா வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்களும் அடங்குவார்களாம். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ், வழக்குகள் பாய்ந்துள்ளன.

Recommended Video

    Nithyananda Case: நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளிடம் சில்மிஷம்.. போலீசே அராஜகம்..

    சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    Police officials probing Nithyananda under new case

    இதையடுத்து, ஆசிரமம் அமைந்துள்ள பகுதியிலுள்ள, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல கமிட்டி, காவல்துறை என பல துறைகளும் விசாரணையை துவங்கின. இந்த நிலையில்தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்தான் அந்த திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியிருந்தார்.

    நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டி உள்ளனர். இது தொடர்பாகத்தான், போலீஸ் நிலையத்திலும், குழந்தைகள் நல அமைப்பினரிடமும் புகார் செய்யப்பட்டது. ஆனால், ஆசிரமத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர், குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி ஆபாச சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!

    நித்யானந்தாவுக்கு சாதகமான அறிக்கைகளை பெறும் வகையில் அவர்கள், குழந்தைகளை பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். எனவே விசாரணை அதிகாரிகள் மீதும், நித்தியானந்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணா, டி.எஸ்.பி.க்கள் கமரியா, ரியால் சர்வையா, சர்தா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. நித்தியானந்தா மீதும் கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலியே பயிரை மேய்ந்த கதையாக, குஜராத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Police officials investigating a case of abduction registered against self-styled godman Nithyananda have been charged under relevant sections of the POCSO Act for allegedly showing pornography to the children of his ashram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X