For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா: குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு கோலார் பேரணியில் போலீசார் தடியடி

Google Oneindia Tamil News

கோலார்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தினர். கர்நாடகாவின் கோலாரில் பாஜக, இந்துத்துவா அமைப்புகள் இந்த ஆதரவு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

Police resorted to lathi-charge on Pro-CAA rally in Kolar

இதனையடுத்து எஸ்.என்.ஆர். சர்க்கிள் அருகே நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டனர். அப்போது மற்றொரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

ஆனால் போலீசார் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தனர். இதனால் போலீசார் தடுப்புகளை தகர்த்துவிட்டு அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

மேயரா வந்திருக்கேன்.. அடுத்து... பழைய தோஸ்துகளை சந்தித்த குஷியில் ஸ்டாலின் அதிரடி!மேயரா வந்திருக்கேன்.. அடுத்து... பழைய தோஸ்துகளை சந்தித்த குஷியில் ஸ்டாலின் அதிரடி!

இதனையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் தேசிய கொடிகள் உள்ளிட்டவற்றை சாலையிலேயே போட்டுவிட்டு அவர்கள் சிதறி ஓடினர். மேலும் கூடுதல் பாதுகாப்பு படையினரும் கோலாரில் குவிக்கப்பட்டனர்.

English summary
Police resorted to lathi-charge on the BJP's Pro CAA rally in Kolar, karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X