For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றைய ஹாட் டாப்பிக்.. "மா. மஞ்சுளா".. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்!

நித்யானந்தா ஆசிரமத்துக்கு பெண் தொழிலதிபர் இடம் ஒதுக்கி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் நித்தியானந்தா ஆசிரம சர்ச்சையில் மா மஞ்சுளா பூஜா

    சென்னை: நித்தியானந்தா பற்றின செய்தி தினமும் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்.. நித்தம் ஒரு செய்தியில் நித்தியானந்தா வலம்வந்து கொண்டே இருக்கிறார்.. அந்த வகையில், புது சர்ச்சையில் உள்ளவர் மஞ்சுளா.. சாமியார் பிடியில் மஞ்சுளா சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

    அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு பள்ளிக்கூட வளாகத்தில் ஆசிரமம் ஒன்று புதிதாக உருவானது. இதில்தான் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் உட்பட பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

    இப்படி நித்யானந்தாவுக்கு ஆசிரமம் அமைத்து கொடுத்ததே இந்த மஞ்சுளாதான் என்கிறார்கள்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது!

    தொழிலதிபர்

    தொழிலதிபர்

    யார் இந்த மஞ்சுளா..?? இவரது முழு பெயர் பூஜா ஷெராப்.. குஜராத்தை சேர்ந்தவர்.. தொழிலதிபர்..கலோரெக்ஸ் என்ற நிறுவனங்களின் அதிபர்.. ஐஐஎம்-ல் படிப்பை முடித்தவர்.. லண்டன் பிசினஸ் காலேஜில் மேற்படிப்பு.. எல்லா பட்டப்படிப்புகளைய்ம் முடித்த கையோடு குஜராத்துக்கு வந்து கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார். மாநிலத்தின் பல பகுதிகளில் இவரது சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் பேமஸ்!

    சிவ அவதாரம்

    சிவ அவதாரம்

    மஞ்சுளா ஒரு சிவபக்தை.. 2017-ல் பெங்களூருக்கு தோழியை பார்க்க வந்தபோதுதான், பிடதி ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டு அவரை பார்க்க சென்றுள்ளார் மஞ்சுளா.. சிவனின் அவதாரம் நித்யானந்தா என்று தோழி சொல்லவும், 10 நாள்கள் ஆசிரமத்திலேயே தங்கி பயிற்சி எடுத்திருக்கிறார் மஞ்சுளா. அதற்கு பிறகு தீவிர பக்தையாகவும் மாறிவிட்டார்.

    மா.. மஞ்சுளா

    மா.. மஞ்சுளா

    சொந்த மாநிலம் திரும்பிய மஞ்சுளா.. தன்னை "மா மஞ்சுளா" என்றுதான் சொல்ல வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டாராம்.. திடீரென பிரார்த்தனையில் இறங்குவாராம்.. பித்தளையைகூட தங்கமாக மாற்றுவேன், ஏன்னா எனக்கு நித்யானந்தாவின் அருள் இருக்கிறது.. என்று சொல்ல தொடங்கினாராம்.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதுதான் நித்யானந்தாவின் குறிக்கோள் என்று என்னென்னவோ சொல்லி உள்ளார்.

    வளாகம்

    வளாகம்

    இந்த தொழிலதிபர் பெண்ணிடம் குஜராத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று நித்யானந்தா சொல்ல, மஞ்சுளா என்ன மாட்டேன் என்றா சொல்வார்? தன் பப்ளிக் ஸ்கூலின் வளாகத்திலேயே இடம் தந்துள்ளார்.. பிடதியில் ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் இருந்த நித்யானந்தா, இங்கும் சில காலம் வந்து தங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.

    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    நித்யானந்தாவை நாடே வலைவீசி தேடி கொண்டிருந்தாலும், இன்னமும் சிவபெருமானின் அவதாரம்தான் என்றுநித்யானந்தாவை மஞ்சுளா தீவிரமாக நம்பி கொண்டுள்ளாராம்.. இது அவர் தனிப்பட்ட விருப்பு என்றாலும், ஆசிரமத்துக்கு வழங்கிய இடம் சட்டத்துக்குப் புறம்பான இடம் என்று குஜராத் போலீஸார் வழக்கு போட்டுள்ளனர். மாநில கல்வித் திட்டத்தில் இருந்த இவரது பள்ளி, மத்திய கல்வி திட்டத்துக்கு மாற்றம் செய்ததிலும் சரியான ஆவணங்களை மஞ்சுளா தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள் குஜராத் போலீசார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இப்போதைக்கு முன்ஜாமீனில் இவர் இருந்தாலும், பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. எப்படியும் இவர் கைலாசா தீவுக்கு சென்றுவிடுவார் என்பதாலேயே பாஸ்போர்ட் முடக்கப்பட்டள்ளதாக தெரிகிறது. அன்று ரஞ்சிதா தொடங்கி இன்று மஞ்சுளா வரை நீண்டு கொண்டு போகும் இந்த பட்டியல் என்றுதான் முடிவுக்கு வருமோ? என்றுதான் நித்தி போலீசாரின் பிடியில் சிக்குவாரோ? அப்படியானால் அந்த கைலாசம் என்னாகும்? என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

    English summary
    gujarat woman entrepreneur manjula helped to nithyananda to establish an ashram in public school campus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X