For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல்- வீடியோ

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் தனது காரை மடக்கியதற்காக போலீஸ் அதிகாரியின் கையை பிடித்து கடித்துள்ளார். மேலும் தனக்கு இருந்த பழைய காயத்தை கடித்து அதில் வந்த ரத்தத்தை அந்த அதிகாரியின் சட்டையில் பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ

    கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதன் பேயாட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துவிட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

    கொரோனா.. 21 நாள் ஊரடங்கு.. சில துறைகளுக்கு மட்டும் விலக்கு.. புதிய லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு! கொரோனா.. 21 நாள் ஊரடங்கு.. சில துறைகளுக்கு மட்டும் விலக்கு.. புதிய லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

    சர்வ சாதாரணம்

    இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் இரவு 12 மணி முதல், 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்றவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மத்திய - மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முதலே கொரோனாவின் வீரியத்தை உணராத மக்கள் நாடு முழுவதும் சாலைகளில் சர்வசாதாரணமாக நடமாடுவது அதிர்ச்சியை அளித்தது.

    சாலை பேரிகாடுகள்

    சாலை பேரிகாடுகள்

    அனைத்து மேம்பாலங்கள், சாலைகளை பேரிகாடு வைத்து தடுத்த போலீஸார் வாகன ஓட்டிகளிடம் எதற்காக செல்கிறீர்கள் என கேட்ட பிறகே அனுமதித்தனர். சிலரை வந்த வழியே திரும்பி போக சொன்னார்கள். இன்னும் சில மாநிலங்களில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் சோஷியல் டிஸ்டன்சிங் சொல்லிக் கொடுத்தார்கள். தோப்புக் கரணம் போட வைத்தார்கள். சேர் இல்லாமல் உட்காருவது போல் சிறிது நேரம் செய்ய வைத்தார்கள். சில போலீஸார் தடியடியும் நடத்தினார்கள். இன்னும் சிலர் கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் சிந்தி கேட்டனர்.

    போலீஸார்

    போலீஸார்

    இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. ஒரு காரில் பெண் ஒருவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தனது நண்பர் ஒருவருடன் பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட் லேக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை போலீஸார் கைகாட்டி நிறுத்தினர். அப்போது எங்கே போகிறீர் என கேட்டனர்.

    திட்டிய பெண்

    திட்டிய பெண்

    அதற்கு மருந்து வாங்க செல்வதாக தெரிவித்தனர். டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை. இதனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. உடனே காரை விட்டு இறங்கிய போலீஸார் அந்த போலீஸ்காரரை திட்டி தீர்த்துவிட்டு கடித்து குதறினார்.

    போலீஸார்

    போலீஸார்

    பின்னர் தனது பழைய காயத்தையும் கடித்து ரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த போலீஸ்காரர் மீது பூசினார். என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என போலீஸையே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    English summary
    Here is the video shows that Police stops a Kolkata Woman's car. She bites him and smears blood on him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X