For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்ற வளாகத்தில் வக்கீலை சுட்டுக்கொன்ற போலீஸ்: உ.பியில் கலவரம், வன்முறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் வழக்கறிஞரை சுட்டுக்கொன்றதால் பெரும் வன்முறை வெடித்தது. அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஆவேசமடைந்த சக வழக்கறிஞர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.

காவல்துறை உதவி ஆய்வாளர் சைலேந்திர சிங் என்பவர் கைதி ஒருவரை அலகாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது சில வழக்கறிஞர்களுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் வழக்கறிஞர்கள் சைலேந்திர சிங்கை தாக்கியதாக தெரிகிறது.

Policeman Shoots Allahabad Lawyer Dead, Rs.10 Lakh Compensation Announced

இதனால் ஆத்திரமடைந்த சைலேந்திர சிங் தனது கைத்துப்பாக்கியால் வழக்கறிஞர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் நவி அகமது என்ற வழக்கறிஞர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் ஒரு வழக்கறிஞருக்கு காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனையடுத்தே நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து பொருட்களை சூறையாடிய வழக்கறிஞர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதலும் நடத்தினர். அத்துடன் பல வாகனங்களை அடித்து நொறுக்கிய வழக்கறிஞர்கள் அவற்றை தீயிட்டு கொளுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

கலவரம் அதிகரித்ததை அடுத்து நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர் குடும்பத்தினருக்கு அறுதல் தெரிவித்துள்ள உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் குமார் யாதவ், நிவாரணம் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

English summary
Violence erupted in Allahabad on Wednesday after a police official shot dead a lawyer and injured another outside the high court. Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav later announced an ex gratia of Rs.10 lakh for the family of the deceased lawyer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X