For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்: வலுக்கும் எதிர்ப்புகளும், கண்டனங்களும்... - ஓர் பார்வை

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இப்புதிய பட்ஜெட் சாதாரண மக்களை கண்ணீர் சிந்த வைத்து விடும் ஏமாற்றமான பட்ஜெட் என பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசு தாக்கல் செய்துள்ள இந்த முதல் பட்ஜெட்டில், ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் பொது-தனியார் கூட்டுத்திட்டங்கள் போன்ற திட்டங்களை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.

முன்னேற்றத்துக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டியுள்ள இந்த ரயில்வே பட்ஜெட்டுக்கு பலதரப்பிலிருந்து கண்டனங்களும், அதிருப்திகளும் குவிந்து வருகின்றன.

மலிவான பட்ஜெட்....

மலிவான பட்ஜெட்....

இது ரயில்வே பட்ஜெட் அல்ல, ரயில்வேயை தனியார் மயமாக்கும் பட்ஜெட், சாதாரண மக்களை கண்ணீர்விட வைத்து விடும் என காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. அதில், ஆழ்ந்த பார்வை இல்லை. அது மலிவான பட்ஜெட். இது நடைமுறைக்கு சாத்தியமற்ற பட்ஜெட். இதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

கண்ணீர்விட வைக்கும்...

கண்ணீர்விட வைக்கும்...

முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், ‘இது ரயில்வே பட்ஜெட் என்பதை விட ரெயில்வேயை தனியார் மயமாக்கும் பட்ஜெட் எனலாம். இது, சாதாரண மக்களை கண்ணீர்விட வைத்து விடும்' என விமர்சித்துள்ளார்.

புதிதாக ஒன்றும் இல்லை...

புதிதாக ஒன்றும் இல்லை...

முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், ‘முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்ததை தவிர, சதானந்த கவுடா உரையில் புதிதாக ஒன்றுமே இல்லை. வருவாயை வீணடித்து விட்டதாக முந்தைய அரசுகளை குறை சொல்வதுபோல தோன்றுகிறது' என்றார்.

பணக்கார பட்ஜெட்...

பணக்கார பட்ஜெட்...

முன்னாள் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘இது, ரயில்வே பட்ஜெட் அல்ல. அரசு-தனியார் கூட்டுறவு மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு பட்ஜெட். ஏழைகளுக்கு எதுவுமே இல்லை. பணக்காரர்களுக்கு ஆதரவான பட்ஜெட். வைர நாற்கர திட்டத்துக்கு ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர். அதைவைத்து நான்கு, ஐந்து கி.மீ. நீள ரெயில் பாதைதான் அமைக்க முடியும். எனவே, இது வெறும் திட்டமாகவே இருக்கும்' எனத் தெரிவித்தார்.

தனியார் மயமாக்கம்...

தனியார் மயமாக்கம்...

முன்னாள் ரயில்வே ராஜாங்க அமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘அரசு-தனியார் கூட்டு, அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கம் இவைகளை கொண்டதுதான் இந்த பட்ஜெட்' என்றார்.

அதிர்ச்சி அளிக்கும் பட்ஜெட்...

அதிர்ச்சி அளிக்கும் பட்ஜெட்...

‘இது அதிர்ச்சி அளிக்கும் பட்ஜெட்' என விமர்சித்துள்ளார் நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

புலம்பல் பட்ஜெட்...

புலம்பல் பட்ஜெட்...

இது தொடர்பாக இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ரயில்வே பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ரயில்வே வாரியம் அளித்த அறிக்கையாகத்தான் அது அமைந்துள்ளது. புதிய திருப்பம், பார்வை ஏதும் இல்லாத பட்ஜெட் இது. "தற்போதைய திட்டங்களுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வேண்டியுள்ளது என்றும், அதற்குப் போதுமான வருமானம் இல்லை' என்றும் பட்ஜெட் அறிக்கையில் அமைச்சர் புலம்பியுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை அளிக்காத பட்ஜெட்...

நம்பிக்கை அளிக்காத பட்ஜெட்...

டி.ராஜா (இ. கம்யூனிஸ்ட்) கூறுகையில், ‘இந்திய ரயில்வே துறையின் வருங்காலம் குறித்து எவ்விதக் கண்ணோட்டமும், தெளிவும் இல்லாமல் ரயில்வே பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. பாஜக தலைமையிலான அரசு ஏற்கெனவே பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. தற்போதைய பட்ஜெட்டில் "வைர நாற்கரத் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 9 லட்சம் கோடி தேவை, ஒரு புல்லட் ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி தேவை' என்று அறிவித்து மக்களுக்கு அச்சத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விரோத பட்ஜெட்...

மக்கள் விரோத பட்ஜெட்...

டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கூறியதாவது, ‘சாமானிய மக்களுக்கு பெரும் கேடுகள் விளைவிக்கும் பட்ஜெட் இது. புல்லட் ரயில், அதி விரைவு ரயில், வைர நாற்கரத் திட்டம் போன்ற கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுக்கான நிதி பற்றிய விவரம் பட்ஜெட்டில் இல்லை. ரயில்வே துறையில் அன்னிய முதலீடு, பொது-தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களைக் கொண்டு வருதல் என கொஞ்சம், கொஞ்சமாக ரயில்வே துறையை தனியார் துறையாக உருவாக்கும் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது.

எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை...

எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை...

பட்ஜெட் தொடர்பாக திருச்சி சிவா (திமுக) கூறுகையில், ‘ரயில்வே பட்ஜெட்டில் இரட்டை அகலப் பாதை திட்டங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக தரம் உயர்த்த வலியுறுத்தி வருகிறேன். முக்கிய இடங்களில் இருந்து ரயில் விடுமாறும் கோரினேன். தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கு ஏராளமான ரயில் திட்டங்கள் தேவை. ஆனால், அக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. திருச்சி-தில்லி இடையே நேரடி ரயிலும், திருச்சி-பெங்களூ இடையே பகல் நேர ரயிலும் விட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதுவும் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வை இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்...

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்...

அன்புமணி ராமதாஸ் (பாமக) கூறுகையில், ‘தமிழகத்தைப் பொருத்தவரை பெருத்த ஏமாற்றம் அளிக்கக் கூடிய பட்ஜெட் இது. புதிய மின்மயமாக்கல் அறிவிப்பு, இரட்டை வழி ரயில் பாதைத் திட்டங்கள் ஏதும் இல்லாதது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மொரப்பூர்-தருமபுரி புதிய ரயில் இணைப்புத் திட்டம் பற்றி தொகுதி உறுப்பினர் என்று நான் நேரில் கோரிக்கை விடுத்த பிறகும் அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..

சுமையை கூட்டும் பட்ஜெட்...

சுமையை கூட்டும் பட்ஜெட்...

ரயில்வே பட்ஜெட் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க. அரசின் ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மொத்தத்தில், பா.ஜ.க. அரசின் ரயில்வே பட்ஜெட் அறிக்கை சாதாரண மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவில்லை, மாறாக மேலும் சுமையையும், ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு ஏமாற்றம்...

தமிழக மக்களுக்கு ஏமாற்றம்...

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோடி அரசினுடைய முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக சதானந்த கவுடாவின் அறிவிப்புகள் இருக்கின்றன' என விமர்சித்துள்ளார்.

நகைச்சுவைகுரிய செயல்...

நகைச்சுவைகுரிய செயல்...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரயில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் சில நாட்களுக்கு முன்பே உயர்த்திவிட்டு தற்போது கட்டண உயர்வில்லா பட்ஜெட் என்று அறிவித்திருப்பது நகைச்சுவைக்குரிய செயல். மொத்தத்தில் இன்றைய ரெயில்வே பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்றே கருத வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

பயணிகள் நலச்சங்கம்...

பயணிகள் நலச்சங்கம்...

இதேபோல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் பி.எட்வர்டு ஜெனி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் பா.ஜான்சிராணி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் ரெயில்வே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கண்டன போராட்டம்...

கண்டன போராட்டம்...

இதற்கிடையே, ரயில்வே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சதானந்த கவுடா வீட்டு முன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து, பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா தலைமையில் கூடிய அவர்கள், அங்கே கண்டன போராட்டமும் நடத்தினர்.

காரை வழிமறித்தனர்...

காரை வழிமறித்தனர்...

அப்போது அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை, முகேஷ் சர்மா பிடுங்கி எறிந்தார். மேலும் அங்கு வந்த சதானந்த கவுடாவின் காரையும் காங்கிரசார் முற்றுகையிட்டதுடன், அதை உள்ளே விடாமலும் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Most of the political party were disappointed with the Railway budget which was tabled yesterday in Lok sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X