For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துக்கொள்ளும் பாஜக-காங்கிரஸ்! பசவண்ணர் ஜெயந்தி படும்பாட்டை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    லிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துகொள்ளும் பாஜக - காங்கிரஸ்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், லிங்காயத்துகள் வாக்குகளை ஈர்ப்பதற்காக, காங்கிரசும், பாஜகவும் பெரும் 'அடிதடியில்' இறங்கியுள்ளன.

    கர்நாடகாவில் லிங்காயத்துகள் அதன் மற்றொரு பிரிவான வீரசைவர்கள் ஜாதி பிரிவு (மத பிரிவு என்றும் சொல்லலாம்) வாக்குகள் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

    Politics over Lingayat votes takes a giant leap

    புரட்சியாளர் பசவண்ணர் உபதேசங்களை ஏற்றுக்கொண்டு வாழும், லிங்காயத்துகள் பெரும்பாலும், பாஜகவுக்கு வாக்களிப்பவர்களாகும். ஆனால், லிங்காயத்து வாக்குகளை ஈர்ப்பதற்காக அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி தனி மதமாக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அறிவித்தார். மத்திய அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

    ஆனால் லிங்காயத்துகள் வாக்குகளை ஈர்க்க என்ன செய்வது என தெரியாமல் விழித்த பாஜக இப்போது, எதிர்ப்பு குரலை கையில் எடுத்துள்ளது. அக்கட்சியின் கர்நாடகாவை சேர்ந்த பெண் எம்.பி.யான ஷோபா கரந்தலாஜே, "பசவ ஜெயந்தியான இன்று, சித்தராமையா, பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது. லிங்காயத்துகளை வாக்குகளுக்காக பிரித்தவர் அவர்" என காட்டமாக கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுத்த கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பசவண்ணருக்கு மாலை அணிவிக்க கூடாது என கூற இவர் யார்? பசவண்ணர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என தெரிவித்தார்.

    இந்த நிலையில், லண்டனில் சுற்றுப் பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, அங்கே பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, டுவிட்டரில் பசவ ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், முதல்வர் சித்தராமையாவும் கூட டுவிட்டரில் பசவ ஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். பசவண்ணர் வழியில் தனது அரசு நடப்பதாக 5 டுவிட்டுகள் வாயிலாக அவர் நீண்ட விளக்கமும் கொடுத்துள்ளார்.

    லிங்காயத்து வாக்குகளுக்காக கர்நாடகாவில் இரு கட்சிகளும் பெரும் அடிதடியே நடத்த ஆரம்பித்துவிட்ட நிலையில், மதசார்பற்ற ஜனதாதளமோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தங்களது வாக்கு வங்கியான ஒக்கலிகர்களை பெரிதாக நம்பியபடி உள்ளது.

    English summary
    With less than a month to go for the assembly elections in Karnataka, politics over the state's Lingayat-Veerashaiva votes has found a new flashpoint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X