For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ்க்கு சிக்கல்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொய்யான பிரமாண பத்திரத்தை 2014 தேர்தலில் தாக்கல் செய்து வெற்றிபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மும்பை உயர்நீதிமன்றம் தேவேந்திர ஃபட்னாவிஸ் குற்றமற்றவர் எனக்கூறி விடுவித்து இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்டே மேல்முறையீட்டு மனுவில் தான் இப்படி ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் உள்ளடக்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்த சூழலில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2014ம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 2 குற்ற வழக்குகளை மறைத்துவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சதீஷ் என்பவர் வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

விதியை மீறியுள்ளார்

விதியை மீறியுள்ளார்

அதில், தன் மீதான இரண்டு குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை ஃபட்னாவிஸ் மறைத்துவிட்டதாகவும். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதியை மீறிய செயல் என்றும், எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

குற்றமற்றவர் என தீர்ப்பு

குற்றமற்றவர் என தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கை எதிர்கொள்ளணும்

வழக்கை எதிர்கொள்ளணும்

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் சதீஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்து வந்தது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கிவிட்டது

தேர்தல் நெருங்கிவிட்டது

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் பாஜக முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்க்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் எந்த சிக்கலும் தற்போதைய நிலையில் இல்லை. சிவசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

English summary
SC Says CM Devendra Fadnavis Will Have to Face Trial for allegedly suppressing pendency of two criminal cases in his 2014 poll affidavit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X